Divyadharshini - உனக்கு எதுக்கு இந்த ட்ரெஸ்.. வேற ட்ரெஸ்ஸ போடு.. டிடியை காண்டாக்கிய நடிகை
சென்னை: Divyadharshini (திவ்யதர்ஷினி) பேட்டிக்காக வந்த நடிகை தனது உடை குறித்து பேசியதாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தெரிவித்திருக்கிறார்.
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார். இதனாலேயே அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

ஃபேமஸான நிகழ்ச்சி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரொம்பவே ஃபேமஸான ஒன்று காஃபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியானது முதலில் காஃபி வித் அனு என்ற பெயரில் நடந்தது. அவரைத் தொடர்ந்து டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்கனவே அந்த நிகழ்ச்சிக்கு பலர் ரசிகர்களாக இருந்த சூழலில் டிடி தொகுத்து வழங்கியதை அடுத்து மேலும் பலர் அந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.
விலகிய டிடி: காஃபி வித் டிடி நிகழ்ச்சியை மட்டுமின்றி பிற நிகழ்ச்சிகளையும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கினார். இதன் காரணமாக விஜய் டிவியின் அடையாளமாகவே மாறினார் திவ்யதர்ஷினி. இந்தச் சூழலில் அவர் விஜய் டிவியிலிருந்து விலகிவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணம் குறித்து தெரியவில்லை.
திரைப்படங்களில் டிடி: திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் தோன்றக்கூடியவர். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த நளதமயந்தி மற்றும் இன்னும் சில படங்களில் தன்னுடைய சிறு வயதில் தோன்றினார் அவர். கடைசியாக சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தில் நடித்தவர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டி: இந்நிலையில் திவ்யதர்ஷினி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எந்த சிறப்பு விருந்தினரும் என்னை கோபப்படுத்தியதில்லை. இருமுறை என்னுடைய நிகழ்ச்சிக்கு ஒரு கதாநாயகி வந்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாகத்தான் வந்திருந்தார். அப்போது அவரது உடையும் என்னுடைய உடையும் ஒரே மாதிரித்தான் இருந்தது.
வேற இல்லையா?: உடனே அந்த நடிகை என்னிடம் வந்து டிடி உங்களிடம் வேறு எதுவும் உடை இருக்கிறதா. எடுத்து வந்திருக்கிறீர்களா என கேட்டார். அதை கேட்டதும் எனக்கு பயங்கர கஷ்டமாகிவிட்டது. அவர் கேட்டது எப்படி இருந்தது என்றால் தொகுப்பாளராக இருந்துகொண்டு உனக்கு எதுக்கு இந்த டிரெஸ் என்ற கண்ணோட்டத்தில் கேட்பது போல்தான் இருந்தது.இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் மரியாதையாகத்தான் பேட்டி எடுத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











