பானிப்பூரிக்கு பிரதர் இருக்கா.. இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்!

சென்னை : தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்க 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது நீயா நானா ஷோ.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் பிரதானமான நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் வழிநடத்துவது மிகவும் சுவாரஸ்மாக காணப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல விவாத நிகழ்ச்சிகள் வந்தபோதிலும் நீயா நானாவிற்கு அதிகமான ஆதரவை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

நீயா நானா நிகழ்ச்சி

நீயா நானா நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியாக 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது நீயா நானா. ஒரே சேனலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஆங்கரை வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, ஒரு விவாத நிகழ்ச்சி இந்த அளவிற்கு ரசிகர்களை கவருமா என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்

நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்

இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே ஒரு விவாதத்தை எடுத்துக் கொண்டால், அதில் இருதரப்பினரையும் சமமான அளவில் ஈடுபடுத்தி அவர்களின் வாதங்களை முன் வைக்க வைப்பதுதான். இந்தப் பணியைத்தான் சிறப்பாக செய்து வருகிறார் கோபிநாத். இந்த நிகழ்ச்சி அவருக்கு பல முறை சிறந்த தொகுப்பாளர் விருதுகளை பெற்றுத் தந்துள்ளது.

சிறப்பான தலைப்பு

சிறப்பான தலைப்பு

இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன் களமிறங்கியுள்ளது நீயா நானா நிகழ்ச்சி. தீபாவளி என்றாலே பட்டாசும் தின்பண்டங்களும்தான் என்பதை கருத்தில் கொண்டு தற்போது பண்டிகை இனிப்புகளும் உணவுகளும் தென்னிந்தியா மற்றும் வட இந்தியா என்ற தலைப்புடன் இந்த வார விவாதம் நடைபெறவுள்ளது.

புதிய ப்ரமோ வெளியானது

புதிய ப்ரமோ வெளியானது

இதற்கான ப்ரமோக்களை தற்போது விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. இதில் வட இந்தியா மற்றும் தென்னிந்திய இனிப்பு வகைகளை இரு தரப்பினரும் அடுத்தடுத்து கூறுகின்றனர். ரசகுலா என்று ஒருவர் நாக்கில் நீரை சொட்ட வைக்க, அந்தப்பக்கம் அதிரசத்தை போட்டிக்கு அழைக்கிறார் தென்னிந்தியர்.

கச்சோரியா அப்படீன்னா?

கச்சோரியா அப்படீன்னா?

இதையடுத்து ஆற்காடு வேலூர் பக்கத்தை சேர்ந்த சிமிளியை ஒருவர் முன்வைக்கிறார். இதையடுத்து வடஇந்திய பெண்மணி இனிப்பு கச்சோரியை குறிப்பிடுகிறார். முதலில் தனக்கு கச்சோரி என்றால் என்ன என்பதை விளங்க வைக்க வேண்டும், கச்சோரி என்றாலே தனக்கு என்னவென்று தெரியாது என்று அப்பாவித்தனமாக கோபிநாத் கேட்கிறார்.

பானி பூரியோட பிரதர்

பானி பூரியோட பிரதர்

உடனடியாக அந்த பெண்மணி இதற்கு பதிலை கூறுகிறார். இட் ஈஸ் பானி பூரிஸ் பிரதர் என்று அவர் கூறியது அரங்கத்தினரை வெகுவாக கவர்ந்தது. அதையே கோபிநாத்தும் மீண்டும் கூற அங்கே சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. இந்த வார ப்ரமோவில் கோபிநாத் முன்னிலையில் அடுக்கி வைக்கப்பட்ட வட இந்திய, தென்னிந்திய இனிப்புகள் அனைவரையும் நாக்கில் எச்சில் ஊற வைத்தது.

பண்டிகைக்கால இனிப்புகள்

பண்டிகைக்கால இனிப்புகள்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பண்டிகைக்கால இனிப்புகளை பிரதானமாக வைத்து ஒளிபரப்பாக உள்ள இந்த நீயா நானா நிகழ்ச்சி கண்டிப்பாக ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தீபாவளிக்கு முன்தினம் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X