ஒரு வழியா தடுப்பூசி போட்டாச்சு… நீங்களும் போடுங்கள்… அறிவுரை சொன்ன கிகி !
சென்னை : சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தி ஷாந்தனு இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
திரைப்பிரபலங்களும் தொடர்ந்து கோவிட் 19 தடுப்பூசியை போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது பொதுமக்களுக்கு ஓர் விழிப்புணர்வாக அமைகிறது.

தொகுப்பாளினி
சின்னதிரையில் மானாட மயிலாட மற்றும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மக்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி லிஸ்டில் இடம் பிடித்தவர் கீர்த்தி. இவரை கீர்த்தி என்று செல்வதை விட 'கிகி' என்று சொன்னால்தான் அனைவர்க்கும் பரீட்சையம்.

பாக்யராஜ் மருமகள்
பிரபல இயக்குநரும் பாக்யராஜின் மருமகளும் சார்மிங் நடிகர் ஷாந்தனுவின் மனைவியுமான இவர் நடனக் கலைஞரும்கூட. தனக்கென்று தனிப்பட்ட வகையில் நடனப் பள்ளியையும் திறந்திருக்கிறார். இந்நிலையில், தான் கணவர் ஷாந்தனுவோடு இணைந்து யூடியூப் சேனலில் இவர்கள் கொடுக்கும் கன்டென்ட் அனைத்தும் ட்ரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.
Recommended Video

யூடியூப் சேனல்
தற்போது இவர்கள், தெளிவா ஒளறுவோம் என்கிற பெயரில் புதிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கின்றனர். முதல் எபிசோடே லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்று, ட்ரெண்டிங்கில் இருக்கிறது. முழுக்க முழுக்க தங்களின் காதல் கதையை இதில் பகிர்ந்து வருகின்றனர்.

செலுத்திக் கொண்டார்
இந்நிலையில் , கீர்த்தி இன்று முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . மேலும், இறுதியாக, அனைத்து குழப்பங்களுக்கு பின் பயத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டேன், தடுப்பூசி பாதுகாப்பானது. இது உங்களை பாதுகாக்கும், பொதுமக்கள் முடிந்தவரை தாமதிக்காமல் தடுப்பூசி போடுங்கள், வீட்டில் இருங்கள், தயவு செய்து ஒழுங்கா மாஸ்க் போடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications