CWC 4 :மீண்டும் குக் வித் கோமாளியில் மீண்டும் களமிறங்கிய மணிமேகலை.. அட சரத்குமாரும் வராரா!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சீசன் 4ல் கலகலப்பான எபிசோட்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது.

விரைவில் நிறைவடையவுள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் பைனல் போட்டியாளராக சிவாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதையொட்டி வைல்ட் கார்ட் ரவுண்டும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குக்குகள், கோமாளிகள் மற்றும் நடுவர்களுடன் இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

Anchor Manimegalai joins again In CWC 4 show and fans happy on that

மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய மணிமேகலை : விஜய் டிவியில் பிக்பாசை தொடர்ந்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான். அடுத்தடுத்த 3 சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 4வது சீசனை ஒளிபரப்பி வருகிறது. குக்குகள், கோமாளிகள் மற்றும் ஆங்கர் தர்ஷன், நடுவர்கள் என மாஸாக களமிறங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பைனல் போட்டியாளராக சிவாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அடுத்தடுத்து மேலும் 4 இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, வைல்ட் கார்ட் ரவுண்டும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து தங்கள் படங்களை பிரமோட் செய்யும் வகையில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் மற்றொரு மாஸ் என்ட்ரியாக, கோமாளியாக இருந்த ஆங்கர் மணிமேகலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவர் தற்போது இந்த வார நிகழ்ச்சியில் மீண்டும் இணைந்துள்ளார். இதற்கான விஜய் டிவியின் தற்போதைய பிரமோ வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியில் ஆங்கராக மணிமேகலை இணைந்துள்ளது இந்தப் ப்ரமோ மூலம் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சியில் சரத்குமாரை வரவேற்ற மணிமேகலை மற்றும் புகழ் ஆகியோர் அவரை கீழே விழுந்து வணங்குவதாக இந்த ப்ரமோவில் காணப்படுகிறது. பின்னணியில் நாட்டாமை பாதம் பட்டால் என்ற பாடல் ஒலிக்கிறது. தொடர்ந்து அவரிடம் குக்கிங்கிற்றும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்று தர்ஷன் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த சரத்குமார், தானே ஒரு குக் தான் என்று கூறுகிறார். தொடர்ந்து, அவரை மணிமேகலை பாராட்டுகிறார்.

Anchor Manimegalai joins again In CWC 4 show and fans happy on that

தான் குழம்பில் உப்பை சரியாக போடு, காரத்தை சரியாக போடு என்று வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு, அதை சரிப்படுத்துவேன் என்று அவர் கூற, தன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சரியாக பொருத்தி, அவர் பேசுவதாக மணிமேகலை பாராட்டு தெரிவிக்கிறார். இதையடுத்து பேசும் புகழ், 4 ஆண்டுகளாக இருக்கும் மணிமேகலை இன்னும் நிகழ்ச்சியில் சிறப்பாக பொருந்தவில்லை என்று கலாய்க்கிறார்.

இவ்வாறாக அந்த ப்ரமோ காணப்படுகிறது. இம்யூனிட்டி சுற்றில் வெற்றி பெற்று சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் முதல் இறுதிச்சுற்று போட்டியாளராக தேர்வாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து அடுத்தடுத்த 4 இறுதிச்சுற்று போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் இந்த நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X