சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை.. நான் ஓடிப்போய் கல்யாணம் செஞ்சவதான்.. மணிமேகலை பதிலடி!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ நிறைவடைந்தாலும் அது ஏற்படுத்தியுள்ள சர்ச்சை நிறைவடையாது போல. இந்த நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட பிரியங்கா தன்னை ஆங்கராக செயல்படவிடவில்லை என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிய மணிமேகலை, நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்ட நிலையில், சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தில் மணிமேகலை, தன்னுடைய கணவர் ஹுசைனுடன் இணைந்து பதிலடி கொடுத்துள்ளார்.

ஆங்கர் மணிமேகலை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக ரசிகர்களை மகிழ்வித்த நிலையில் இந்த சீசனின் துவக்கத்திலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் இந்த நிகழ்ச்சி சிக்கியுள்ளது. நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசுவதாகவும் ரசிகர்களை எரிச்சல் படுத்தும் வகையில் அடுத்தடுத்து ஒரே மாதிரியான காட்சிகள் அரங்றேறி வருவதாகவும் கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியிலிருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகியதும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு சீசன்களாக கோமாளியாக செயல்பட்டு வந்த ஆங்கர் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் ஆங்கராக இணைந்து களமிறங்கினார்.
சுயமரியாதை முக்கியம்: கோமாளியாக ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த இவர், எப்படி செயல்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்த நிலையில் ஓரளவுக்கு அதை பூர்த்தி செய்யவே செய்தார் மணிமேகலை. இந்நிலையில் நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட ஆங்கர் பிரியங்கா தன்னை சிறப்பாக செயல்பட விடவில்லை என்று கூறி நிகழ்ச்சியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகியுள்ளார். பணம், புகழைவிட சுயமரியாதை மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறிய நிலையில் அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். தொடர்ந்து பிரியங்காவையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மணிமேகலை வீடியோ: ஒரு கட்டத்தில் பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கையையும் வைத்து அவரை திட்டிய நிலையில் இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் உடன் பணியாற்றிய குரேஷி, சுனிதா, நடிகை ஷகிலா உள்ளிட்டவர்கள் மணிமேகலைக்கு எதிராக பேசியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய யூடியூப் வீடியோ பக்கத்தில் இது குறித்து பேசியுள்ள மணிமேகலை, தனக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் பேசிவிட்டு பின்பு பணம் காசுக்காக இப்படி சிலர் பேசுவதாக குரேஷி உள்ளிட்டவர் மீது குற்றச்சாட்டை பகிர்ந்துள்ளார்.
அடுத்தடுத்து கேள்வி: மேலும் தான் வீட்டைவிட்டு ஓடி வந்து திருமணம் செய்துக் கொண்டது குறித்து தன்னுடைய அம்மாவே கவலைப்படாத நிலையில், இந்த மம்மிக்கு என்ன பிரச்சினை என்று ஷகிலாவையும் கேட்டுள்ளார். இதனிடையே, மணிமேகலையின் கணவர் ஹுசைன் சொம்பிலிருந்து தண்ணீர் கொடுக்க, சொம்பை தூக்கி எறிந்துவிட்டு, சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை என்று மறைமுகமாக சுனிதாவையும் சுட்டிக் காட்டியுள்ளார். மொத்தத்தில் தனக்கு ஆதரவாக பேசிவிட்டு, தற்போது எதிராக பேசியுள்ளவர்கள் குறித்து இந்த வீடியோவில் மணிமேகலை தன்னுடைய கணவருடன் இணைந்து கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











