மணிமேகலை கர்ப்பமா.. குக் வித் கோமாளி புகழ் என்ன சொல்லியிருக்காருன்னு பார்க்கலாமா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது குக் வித் கோமாளி சீசன் 4.

இந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல மிகவும் உற்காகமாகத்தான் பங்கேற்றார் கோமாளி மணிமேகலை.

ஆனால் சில வாரங்கள்கூட நிகழ்ச்சியில் நீடிக்காமல் பாதியிலேயே வெளியேறும் முடிவை அறிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்துவருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த மாதத்தில் இந்த நிகழ்ச்சி துவங்கிய நிலையில், அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. நிகழ்ச்சியில் புதிய புதிய மாற்றங்கள், புதிய கோமாளிகள், புதிய குக்குகள், அதே நடுவர்கள், ஆங்கர் என நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது.

அடுத்தடுத்த மாற்றங்கள்

அடுத்தடுத்த மாற்றங்கள்

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக சிறப்பாக செயல்பட்ட பாலா, நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. மாறாக கடந்த சீசன்களில் கோமாளியாக அனைவரையும் கவர்ந்து, அதன்மூலம் காமெடி நடிகையாகும் வாய்ப்புகளை பெற்ற ஷிவாங்கியும் இந்த சீசனில் குக்காக மாறியுள்ளார். புகழ், இந்த சீசனில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

விலகிய மணிமேகலை

விலகிய மணிமேகலை

இந்நிலையில், கடந்த வாரத்துடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை கோமாளி மணிமேகலை வெளியிட்டிருந்தார். இதனால் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அவர் வெளியேறும் முடிவை மட்டும் அறிவித்து, அதற்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

மணிமேகலை கர்ப்பம்?

மணிமேகலை கர்ப்பம்?

இதனால் இதற்கான காரணம் குறித்து பல யூகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. அவர் கர்ப்பமானதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்டு வருகிறது.

புகழ் பேட்டி

புகழ் பேட்டி

இவை எதுவும் ஊர்ஜிதம் செய்யப்படாத நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளி புகழின் சமீபத்திய பேட்டியில் அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த புகழ், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது மணிமேகலையின் தனிப்பட்ட விஷயம் என்றும், அவர் கர்ப்பமாக உள்ளாரா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

 வதந்திகளை பரப்பாதீங்க

வதந்திகளை பரப்பாதீங்க

இந்த விஷயம் குறித்து தெரியாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் புகழ் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கர்ப்பமாக இருந்தால் அது மிகவும் சந்தோஷமான விஷயம் என்றும் அவர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் என்றும் புகழ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X