வடிவேலுவின் தங்கையாக மாறிய மணிமேகலை.. அதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா!
சென்னை : சன் டிவியில் ஆங்கராக கலக்கிக் கொண்டிருந்தவர் மணிமேகலை. தொடர்ந்து விஜய் டிவிக்கு மாறினார்.
விஜய் டிவியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.

ஆங்கர் மணிமேகலை
சன் டிவியில் ஆங்கராக கலக்கி கொண்டிருந்தவர் மணிமேகலை. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் ஒரு கட்டத்தில் விஜய் டிவிக்கு மாறினார். ஹுசைன் என்ற நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து விஜய் டிவியின் பல ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

யூடியூப் சேனல் நடத்திவரும் மணிமேகலை
தனிப்பட்ட முறையில் ஹுசைன் மணிமேகலை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி பல பதிவுகளை போட்டு வருகிறார். இதன்மூலமும் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக காணப்படும் மணிமேகலை, பல வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள்
விஜய் டிவியின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் இவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

மனம் கவர்ந்த கோமாளி
இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக இவர் கலக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக பல கெட்டப்புகளை கோமாளிகள் போட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் வடிவேலுவின் தங்கையாக மணிமேகலை கெட்டப் போட்டுள்ளார்.

வடிவேலுவின் தங்கை
வடிவேலுவின் தங்கை மேகலா கேரக்டர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம். வானத்தையும் பூமியையும் பார்த்து வளர்ந்த புள்ள என்று தன்னுடைய தங்கைக்காக உருகுவார் வடிவேலு. அவருக்கு செந்திலை மணமுடித்து வைப்பார். அந்த கெட்டப்பைத்தான் தற்போது மணிமேகலை போட்டுள்ளார்.
Recommended Video

நண்பர்கள் கலாய்த்த கேரக்டர்
இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டுள்ளார் மணிமேகலை. மேலும் தன்னுடைய பள்ளி, கல்லூரி நாட்களில் இந்த காமெடியை வைத்துதான் தன்னுடைய நண்பர்கள் தன்னை கலாய்ப்பார்கள் என்ற உண்மையையும் கூறியுள்ளார். அதே கெட்டப்பை தற்போது போட்டுள்ளது வேடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











