என்னால முடியல சார்.. மேடையில் கதறி அழுத மணிமேகலை.. கை கொடுத்து தேற்றிய விஜய் ஆண்டனி!

சென்னை: நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளி மணி மேகலை திடீரென மேடையில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழுதார். அப்போது அருகில் இருந்த விஜய்ஆண்டனி, அவரை தேற்றி ஆறுதல் படுத்தினார். இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய் ஆண்டனியின் நல்ல பண்பை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி னநட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அந்த படத்தை தொடர்ந்து, நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வெடி உள்ளிட்ட பல படங்களுக்கு ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Anchor Manimegalai who cried on stage Vijay Antony consoled her

ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி நான் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவரது மகள் மூத்த மகளான மீரா, கடந்த செப்டம்டபர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தில் மிகப்பெரிய இழப்பை சந்தித்த போதும், தனது மன தைரியத்தை விட்டு விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மேன் ஆஃப் பாசிட்டிவிட்டி: இந்நிலையில், பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்று, மேன் ஆஃப் பாசிட்டிவிட்டி விருதை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளது. இந்த விருதை தளபதி விஜய்யின் அம்மா, ஷோபா சந்திர சேகர் வழங்கினார். அதில், பேசிய விஜய் ஆண்டனி, நான் நல்ல இருக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும் சிலருக்கு பணம் இல்லை என்கிற வலி இருக்கும், சிலருக்கு அன்பு காட்ட ஆள் என்கிற வலி இருக்கும். இப்படி ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வலியோடத்தான் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தான் விஷயம்.

கதறி அழுத மணிமேகலை: அப்போது தொகுப்பாளி மணிமேகலை, நான்கு மாதத்திற்கு முன் என் காலில் சிறிய அடிபட்டது. அப்போது நடக்கவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த நான்கு மாசமும் நான் பட்டவேதனை சொல்ல முடியாதது. அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது உங்கள் வீடியோ தான். உங்கள் மோடிவேஷனாலை பார்த்து நான் வியந்துவிட்டேன். இப்போது நான் இங்கு இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்று கதறி அழுதார்.

உங்களுடைய சின்ன பிரச்சனை: அப்போது, மணிமேகலையின் கையைப்பிடித்து ஆறுதல் படுத்திய விஜய் ஆண்டனி, பல விஷயத்தை தாண்டி நம்முடைய வாழ்க்கை பயணம் என்பது கொசுவிட மிகவும் சின்னதான ஒரு புள்ளி தான் தாம். நம்முடைய கண்ணுக்கு இதுதான் உலகமே என்று பார்க்காமல், நாம் இந்த உலகத்தின் சின்ன பகுதி என்று நினைச்சீங்க என்றால், உங்களுடைய பிரச்சனை மிகவும் சின்னதானதாக இருக்கும். உங்களை விட உங்களுடைய கவலைகள் பிரச்சனைகள் எல்லாம் மிகவும் சிறியதாக தெரியும். அது மட்டுமில்லாமல், இன்னைக்கு நமக்கு இருக்கும் நல்ல விஷயத்தை பார்த்தாலே பல வலிகளை மறந்துவிடலாம்.

ஊக்கம் கொடுக்கும் பேச்சு: சாப்பிடுவதற்கு,தூக்குவதற்கு,படம் பார்ப்பதற்கு என்று நேரத்தை ஒதுக்குகிறோம். ஆனால், நம்மை பற்றி யோசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது இல்லை. இப்படி நம்மை பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்கினாலே பல விஷயத்தை ஜெயித்துவிடலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் எனக்கு இசையமைக்க, நடிக்க, இயக்க தெரியாது. எது நமக்கு வேண்டும் என்று அதைநோக்கி சென்று கொண்டே இருந்தால் நமக்கானது நிச்சயம் நம்மை தேடி வரும் என்று அந்த நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X