கடல் அலையில் சிக்கிய ‘டிடி‘யின் அக்கா … ஷூட்டிங் பரிதாபங்கள் !
சென்னை : தொகுப்பாளினி பிரியதர்ஷினி படப்பிடிப்பின் போது கடல் அலையில் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
Recommended Video
இவருடைய அக்கா பிரியதர்ஷினி ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர்.

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி தமிழ் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு நாயகியாகவும், நாடகங்களிலும் நடித்துள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று விருது வாங்கினார். பாய்ஸ் வெர்சஸ் கேர்ல்ஸ் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த நடன மங்கையாக பட்டம் பெற்றார்.

ஏராளமான ரசிகர்கள்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான டிடி எனும் திவ்யதர்ஷினியின் அக்காதான் இந்த பிரியதர்ஷினி . இவருக்கென அந்த காலகட்டத்தில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களிலும் பணியாற்றியுள்ளார். இவரது வீட்டில் அனைவருமே தொகுப்பாளர்களாகவே பணியாற்றியுள்ளனர்.
மீண்டும் சீரியல்களில்
1990ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரியதர்ஷினி. முதன்முதலில் பொதிகை டிவியில் மெகாசீரியல் ஆன விழுதுகள் சீரியல் மூலம் அறிமுகமானார். தற்போது கூட சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் பரிதாபங்கள்
இந்நிலையில், தற்போது தொகுப்பாளினி பிரியதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கடற்கரையில் இருக்கும் பாறை மீது நடனம் ஆடி வீடியோ எடுத்துள்ளார். அப்போது பெரிய அலை வந்து அவரை அப்படியே தள்ளி விட்டுள்ளது. அந்த பெரிய கடல் அலையால் அப்படியே திக்குமுக்காடிப்போன பிரியதர்ஷினி பின்னர், சுதாரித்துக்கொண்டு எழுந்துவிட்டார். ‘ஷூட்டிங் பரிதாபங்கள்' என சொல்லி அவர் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











