யார் அந்த தொழிலதிபர்.. டிடி 2வது திருமணம் குறித்து ரகசியம் பகிர்ந்த சகோதரி!

சென்னை : விஜய் டிவியின் பிரபல ஆங்கராக கடந்த 20 ஆண்டுகளை கடந்து இருந்து வருபவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.

காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இவர் கவர்ந்துள்ளார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தொடர்ந்து முன்னணி படங்கள், முன்னணி நடிகர்கள் என அடுத்தடுத்த விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் டிடியை பார்க்க முடிகிறது.

விஜய் டிவி ஆங்கர் டிடி

விஜய் டிவி ஆங்கர் டிடி

விஜய் டிவியின் ஆங்கர்களாக இருந்து பிரபலமடைந்தவர்கள் மற்றும் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்கள் அதிகமானோர் உள்ளனர். அந்த வரிசையில் அந்த சேனலின் பிரபல ஆங்கர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினிக்கும் முக்கியமான பங்கு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக இவர் இருந்து வருகிறார்.

காபி வித் டிடி நிகழ்ச்சி

காபி வித் டிடி நிகழ்ச்சி

விஜய் டிவியின் பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள டிடிக்கு முக்கியமான நிகழ்ச்சியாக காபி வித் டிடி நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் சினிமா பிரபலங்களை, அவர்களது கேரியர் மற்றும் சொந்த வாழ்க்கையை வெளிச்சத்திற்கு உள்ளாக்கினார் டிடி.

சினிமாவில் கவனம்

சினிமாவில் கவனம்

தற்போது தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் மட்டுமே இவரை காண முடிகிறது. பிரபலங்களின் பேட்டிகள், முன்னணி படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே டிடி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் விஜய் டிவி மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அடுத்தடுத்த படங்களில் டிடி

அடுத்தடுத்த படங்களில் டிடி

தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என படங்களில் நடித்துவருகிறார் டிடி. இவருக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில், விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 பிரியதர்ஷினி விளக்கம்

பிரியதர்ஷினி விளக்கம்

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசிய டிடியின் சகோதரி, பிரியதர்ஷினி, அதுகுறித்து தங்களது குடும்பத்தினரும் யார் அந்த தொழிலதிபர் என்று டிடியிடம் கேட்டதாகவும் அதற்கு தனக்கே தெரியவில்லை என்று அவர் பதிலளித்ததாகவும் பிரியதர்ஷினி கூறியுள்ளார். மேலும் இதுவரை தன்னுடைய திருமண விஷயத்தில் டிடி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புன்னகையை பரிசாக்கும் டிடி

புன்னகையை பரிசாக்கும் டிடி

அதுகுறித்து டிடியிடம் கேட்டால், புன்னகையை மட்டுமே பரிசாக தருவதாகவும், எப்போதும் அவர் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனமாக இருப்பதால், இத்தகைய வதந்திகளுக்கு டிடி மட்டுமில்லாமல், தங்களது குடும்பத்தினரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் பிரியதர்ஷினி மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X