உன்னால இப்படி ஒரு காரியத்த செய்வேன்னு நினைச்சுக்கூட பார்க்கல சித்து.. ஆங்கர் பிரியங்கா உருக்கம்!

சென்னை: நடிகை சித்ரா மரணமடைந்து 15 நாட்கள் ஆன நிலையில் விஜய் டிவியின் பிரபலமான விஜே பிரியங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி கணவர் ஹேமந்துடன் நசரத் பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலைக்கு அவரது கணவரின் சந்தேக புத்திதான் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஹேமந்தை கைது செய்த போலீசார் அவரை பொன்னேரி சிறையில் அடைத்துள்ளனர்.

ஸ்டார்ட் மியூஸிக் படப்பிடிப்பு

ஸ்டார்ட் மியூஸிக் படப்பிடிப்பு

சித்ரா மரணமடைவதற்கு முன்பாக அதாவது கடந்த 8ஆம் தேதி இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பங்கேற்றார் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

வேற லெவல் பர்ஃபாமன்ஸ்

வேற லெவல் பர்ஃபாமன்ஸ்

இதில் சித்ரா தனது சீரியல் ஜோடியான குமரனுடன் சேர்ந்து அதகளம் பண்ணினார். டிஸ்பிளேவில் காட்டப்பட்ட ஈமோஜிகளுக்கு ஏற்ப முக பாவனைகளை வைத்து கலக்கினர். அதனை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என பாராட்டினர்.

ஸ்பிரே அடிச்சுப்புடுவேன்

ஸ்பிரே அடிச்சுப்புடுவேன்

இதேபோல் ஸ்பிரே அடிச்சுப்புடுவேன் ரவுண்டிலும் நான் ரெடி நீங்க ரெடியா பாட்டை பாடினார். தொடங்கும் போதே எனக்கு மட்டும் ஏன் பழைய பாட்டை போட்டீங்க என்று பாடலாகவே பாடி கேட்ட சித்ரா தவறாக பாடி சொதப்பினார்.

மேகம் கருக்குது..

மேகம் கருக்குது..

இதனால் அவர் மீது ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதனை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு மேகம் கருக்குது மியூசிக்குக்கு ஏற்ப நடனமாடினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த எபிசோடு ஒளிபரப்பப்பட்டது.

கணவருடன் காரில்..

கணவருடன் காரில்..

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு சீக்கிரம் போகணுமா சித்ரா என கண்ணீர் விட்டனர். அந்த எபிசோடுக்கான ஷுட்டிங் முடிந்து கணவருடன் காரில் ஹோட்டல் அறைக்கு வந்தார் சித்ரா.

ஆபாமாக திட்டிய கணவர்

ஆபாமாக திட்டிய கணவர்

அப்போது சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஹேமந்த் சண்டையிட்டுள்ளார். காரிலேயே தொடங்கிய இந்த சண்டை அறைக்கு வந்தும் தொடர்ந்தது. அப்போது சக நடிகர்களுடன் ஒப்பிட்டு ஹேமந்த் ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

வந்து போ மகளே..

வந்து போ மகளே..

இந்த எபிசோடு ஒளிப்பரப்பான நாளில் சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே என குறும்படம் ஒன்றை ஒளிப்பரப்பி உருக வைத்தனர். இந்நிலையில் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் விஜே சித்ராவின் தோழியுமான பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை ஷேர் செய்துள்ளார்.

நினைத்தே பார்க்கவில்லை

நினைத்தே பார்க்கவில்லை

அதாவது அன்றைய ஷுட்டிங்கின் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் பிரியங்கா எடுத்துக் கொண்ட செல்பி போட்டோக்களை ஷேர் செய்துள்ள பிரியங்கா, சந்தோஷமான இந்த போட்டோவை பெரும் துக்கத்துடன் நான் போஸ்ட் செய்வேன் என்று நினைத்தே பார்க்கவில்லை.

அதுவும் உன்னால..

அதுவும் உன்னால..

அதுவும் உன்னால.. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் டி சித்ரா என்றும் #RIP LOVE என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா. மேலும், சித்ராவும் தானும் இருக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள பிரியங்கா, உன்னுடன் இருந்த இந்த தருணங்களை மறக்க மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

RDO விசாரணையில் கலந்துக்கொண்ட Chithraவின் தோழி Sharanya Turadi
பிரியங்காவுக்கு ஆறுதல்

பிரியங்காவுக்கு ஆறுதல்

மேலும் #CHITHU எப்போதும் எங்களின் டார்லிங்... நாங்கள் பண்ணுகிறோம் என்று பதிவிட்டுள்ளார். பிரியங்கா ஷேர் செய்துள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X