படாரென கூட்டத்தில் பாய்ந்து திடீரென பார்வையாளரின் கன்னத்தை கடித்த பிரபல தொகுப்பாளினி.. வைரல் வீடியோ
தெலுங்கு டிவி தொகுப்பாளினி வர்ஷினி, பார்வையாளர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஐதராபாத்: நிகழ்ச்சியை பார்க்க வந்த பார்வையாளருக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரபல தொகுப்பாளினி வர்ஷினி.
தெலுங்கு தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவர் வர்ஷினி. சந்தாமாமா கதாலு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வர்ஷினி, பின்னர் லவ்வர்ஸ், பெஸ்ட் ஆக்டர்ஸ், ஸ்ரீ ராம ரக்ஷா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர் வர்ஷினியின் கவனம் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பியது. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வர்ஷினியை கடந்த 2017ம் ஆண்டு 'அதிக பேர் விரும்பும் பெண்' எனும் விருதை கொடுத்து கவுரவித்தது ஐதராபாத் டைம்ஸ்.
வர்ஷினி தற்போது தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் படாஸ் 2 எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் எபிசோட் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ஒரு பையன் கன்னத்தை கடித்து, முத்தம் கொடுத்தார் வர்ஷினி. அந்த பையன் மிகவும் க்யூட்டாக இருந்ததால், முத்தம் கொடுத்ததாக வர்ஷினி கூறினார்.
பார்வையாளருக்கு வர்ஷினி முத்தம் கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. நிகழ்ச்சியின் டிஆர்பியை கூட்டுவதற்காகவே வர்ஷினி அவ்வாறு செய்தார் என்ற பேச்சும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











