"சூர்யாவுக்கு ஸ்டூல் தான் போடணும்.." - சூர்யாவை கிண்டலடித்த தொகுப்பாளினிகள்.. ரசிகர்கள் பதிலடி!
Recommended Video

சென்னை : தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் உள்ள நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இவர் அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

கே.வி.ஆனந்த் இயக்கம்
'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியானதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. அதற்குப் பிறகு நடிக்கவிருக்கும் சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருக்கிறார். இதை சூர்யாவே உறுதி செய்துள்ளார்.

அமிதாப் பச்சன்
'சூர்யா 37' படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகள்
இதை வைத்து பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகளாக இருக்கும் நிவேதிதா மற்றும் சங்கீதா ஆகியோர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளனர்.

சூர்யாவுக்கு ஸ்டூல் போடணும்
"அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு... அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்" என ஒருவர் கிண்டலடிக்க, இன்னொருவர், "அமிதாப் பச்சனை இந்தப் படத்தில் உட்கார வச்சே தான் நடிக்க வைக்கணும்" என கலாய்த்துள்ளார்.

ரசிகர்கள் கோபம்
இவை சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா பேசும் வசனத்தைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சூர்யாவின் பஞ்ச்
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா சொல்வதாக ஒரு வசனம் வரும் "நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை, எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்" என்று சூர்யா கூறியிருப்பார்.


Click it and Unblock the Notifications











