ஒருவழியா ஷூட் முடிஞ்சிடுச்சு.. விரைவில் ரிலீசாகும் ’ஓ மை கடவுளே’!
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: ஆக்சஸ் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் 'ஓ மை கடவுளே' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
அசோக் செல்வன், ரித்திகா சிங், சாரா, வாணி போஜன் நடித்துள்ள இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிகட்ட பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

டாம் & ஜெர்ரி
தனுஷின் திருடா திருடி, ஜீவாவின் சிவா மனசுல சக்தி, விஜய்யின் சச்சின் பட பாணியில் இந்த ஓ மை கடவுளே படமும் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி தான் என்பது டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மூலமாகவே தெரிகிறது.
தெகிடி, பீட்சா 2, கூட்டத்தில் ஒருத்தன் படங்களை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் இந்த படத்தில் நடித்துள்ளார். இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் லீடு ரோலில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த கேட் அண்ட் மவுஸ் காதல் கதை நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா
தெய்வமகள், ரன் சீரியல்களில் நாயகியாக நடித்து சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்பட்டு வரும் நடிகை வாணி போஜன், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகி உள்ள தெலுங்கு படத்தில் நடித்துள்ள வாணி போஜன், ஒரே சமயத்தில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அறிமுகமாகவுள்ளார்.
ஓ மை கடவுளே
ஆக்சஸ் ஃபிலி ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி, வாணி போஜன், சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.

கோமாளி கதையா?
ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கோமாளி திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில், ஓ மை கடவுளே படத்தின் கதையும் கோமாளி படத்தின் கதையும் ஓரிடத்தில் ஒத்துப்போகின்றன.
அதாவது, கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் முன்னாள் காதலியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருப்பார். இந்த படத்தில் அசோக் செல்வனின் முன்னாள் காதலியாக வாணி போஜன் நடித்துள்ளார். அதனால், இரண்டு கதைகளுக்குமிடையே சில ஒற்றுமைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட் ஓவர்
ஓ மை கடவுளே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது. அசோக் செல்வன், ரித்திகா சிங் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











