கொரோனா ஒரு பக்கம் இருக்கட்டும்.. சைலன்ட்டா மாஸ்டர் டீம் செஞ்சத பார்த்தீங்களா! #AndhaKannaPaathaakaa

சென்னை: கொரோனா வைரஸின் அச்சம் ஒரு பக்கம் இருக்கு மாஸ்டர் படத்தின் அந்த கண்ண பாத்தாக்கா பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

Master - Andha Kanna Paathakaa Lyrical Video | Thalapathy Vijay | Anirudh | Yuvan

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 7 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 9 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படங்கள் மட்டுமின்றி சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

அந்த கண்ண பாத்தாக்கா..

அந்த கண்ண பாத்தாக்கா..

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்கா பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை சோனி மியூஸிக் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

மெலோடி பாடலான இப்பாடலை, வெளியான சில மணி நேரத்திலேயே சுமார் 5 லட்சம் பேர் வரை கண்டு ரசித்திருக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

இந்நிலையில் அந்த கண்ண பாத்தாக்கா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த லிரிக்கல் வீடியோவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #AndhaKannaPaathaakaa என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

தள்ளிபோகுமா?

தள்ளிபோகுமா?

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆஅம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X