சவாலான கதாபாத்திரங்களே என் சாய்ஸ் - ஆயுஷ்மான் குரானா
சென்னை: அந்தாதூன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா, அந்த படத்தில் நடித்த, தனது அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அந்தாதூன் படத்தில் நடித்தது மூலம் நான் வளர்ச்சி மட்டும் அடையவில்லை. எனக்குள் இருக்கும் நடிகரை மென்மேலும் செதுக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு முழுவதும் ஒரே படத்தை பற்றியும், அது அடைந்த வெற்றியைப் பற்றி மட்டுமே பேச்சு அடிபடுகிறது. அது தான் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அந்தாதுன் திரைப்படம்.

இப்படத்தில் கண் தெரியாத ஒருவராக ஆயுஷ்மான் குரானா சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை தட்டி சென்றது.
அந்தாதூன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா, அந்த படத்தில் நடித்த, தனது அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அந்தாதூன் படத்தில் நடித்தது மூலம் நான் வளர்ச்சி மட்டும் அடையவில்லை.
எனக்குள் இருக்கும் நடிகரை மென்மேலும் செதுக்கியுள்ளது. இதன் மூலம் நான் என்னுடைய திறமைகளை மேலும் பெருக்கிக்கொள்ளவும், எனது நம்பிக்கைக்கும் சிந்தனைக்கும் சவால் விடும் வகையில் இருக்கும் புதிய படங்களை எதிர்பார்க்கிறேன்.
எனக்கு இந்த அற்புதமான வாய்ப்பை என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்ததற்கும், என்னுடைய மாறுபட்ட பக்கத்தை நானே ஆச்சரியப்படும் வகையில் வெளிக்கொண்டு வந்ததற்காகவும், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன், என்று தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தினர். தன்னுடைய நடிப்பை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
அந்தாதூன் திரைப்படத்தில் நடித்த போது அவருக்கு கிடைத்த பல இனிமையான அனுபவங்கள் அவருக்கு மிகவும் ஸ்பெஷலாக இருந்ததால் அதை அவர் வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
கமர்சியல் ரீதியாக வெற்றிபெற்ற ட்ரீம் கேர்ள் திரைப்படத்தை தொடர்ந்து ஆயுஷ்மான் குரானா, மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். பாலா என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து குலபோ சித்தபோவிலும் நடிக்கவுள்ளார். அவரின் இந்த பயணம் தொடர வேண்டும்.


Click it and Unblock the Notifications











