லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவ்ளோ கோடி கேட்ட இந்திப் பட ரீமேக்.. வேறு ஹீரோயின் ஒப்பந்தம்!
சென்னை: நடிகை நயன்தாரா, நான்கு கோடி ரூபாய் கேட்ட இந்தி பட ரீமேக்கில் வேறு நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.
Recommended Video
இந்தியில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், அந்தாதுன்.
பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

தேசிய விருதுகள்
சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்குப் போட்டி நிலவியது. தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார் என்றும் தனுஷ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. பின்னர் இதன் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கினார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

தெலுங்கு ரீமேக்
இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நிதின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தபுவின் கேரக்டர் முக்கியமானது. அந்தப் படத்தின் ஹிட்டுக்கு அவர் கேரக்டரும் முக்கியம் என்பதால், அவரையே இதிலும் நடிக்க வைக்க படக்குழு பேசியது.

நயன்தாரா
ஆனால் அவர் கேட்ட தொகை அதிகம் என்பதால் வேறு நடிகைகளிடம் பேசி வந்தனர். நடிகை நயன்தாரா அந்த கேரக்டரில் நடிப்பதற்கு சம்பளமாக ரூ.4 கோடி கேட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த படக் குழு வேறு சில நடிகைகளிடம் பேசி வந்தனர். நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், ஸ்ரேயா ஆகியோரிடம் பேசி வந்ததாகக் கூறப்பட்டது.

தபு நடிக்கிறார்
அவர்களும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதையடுத்து ஒரிஜினலில் நடித்த நடிகை தபு கேட்ட சம்பளத்தையே கொடுத்து அவரையே படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் இறுதியில் தொடங்க இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











