தமிழுக்கு வரும் அந்தாதுன்: கள்ளக்காதலுக்காக கணவரையே கொல்லப் போவது யார்?
Recommended Video
சென்னை: அந்தாதுன் பட ரீமேக்கில் சித்தார்த், த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்களாம்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்த அந்தாதுன் இந்தி படம் ஹிட்டானது. கடந்த 3ம் தேதி அந்தாதுன் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்தியாவில் ரூ. 73. 37 கோடி வசூலித்த அந்தாதுன் சீனாவில் இதுவரை ரூ. 280.70 கோடி வசூல் செய்துள்ளது. படம் இன்னும் அங்கு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரீமேக்
அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கிறார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறாராம்.

கொலை
படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்திற்கு இணையானது தபுவின் கதாபாத்திரம். அதில் எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்பது தான் முக்கியம். கள்ளத்தொடர்பு வைத்து கணவரையே கொலை செய்யும் கொடூர பெண்ணாக நடிக்க எந்த நடிகை ஒப்புக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை.

நடிப்பு
இல்லை தபுவையே தமிழிலும் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு அந்தாதுன் படத்தில் நடிப்பால் மிரட்டியிருந்தார் தபு என்பது குறிப்பிடத்தக்கது. தபு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தாலும் சிறப்பாக இருக்கும்.

இந்தி
பிங்க் இந்தி படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











