விறுவிறுப்பாக ரெடியாகும் அந்தகன்… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை : அந்தகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் டப்பிங் பணிகள் மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன.

சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்தகன்

அந்தகன்

சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த பிரசாத் அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு அந்தகன் என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளன. இதில்,பிரசாத் கதாநாயகனாக நடிக்கிறார் இவருடன் சிம்ரன், ப்ரியா ஆனந்த், வனிதா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்கி உள்ளார்.

விறுவிறுப்படையும் டப்பிங் பணி

விறுவிறுப்படையும் டப்பிங் பணி

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, படத்தின் அடுத்தக்கட்ட பணிகளான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டப்பிங்கில் நடிகர் கார்த்திக், லீலா சம்சன், பூவையார், மனோ பாலா, நடிகர் பிரஷாந்த் உள்ளிடோர் கலந்துகொண்டு டப்பிங் பேசி வருகின்றனர். அவர்கள் டப்பிங் பேசும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதேபோல, படத்தின் கதாநாயகியான பிரியா ஆனந்த் டப்பிங் பணிகளை தொடங்கிய, புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக முடிவடைந்து வருவதை அடுத்து, இத்திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தாதூன் 3 தேசிய விருதை வென்றது

அந்தாதூன் 3 தேசிய விருதை வென்றது

2018ம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். இந்தப் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.

தெலுங்கில் நிதின்

தெலுங்கில் நிதின்

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் நிதின், தபு, நபா நடேஷ் உள்ளிட்டோர் நடிக்க மெர்லபாகா காந்தி இயக்கி வருகிறார். மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள், இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே வேதாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

மலையாளத்தில் ப்ரித்விராஜ்

மலையாளத்தில் ப்ரித்விராஜ்

அந்தாதூன் திரைப்படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X