அசத்துறாங்களே.. அதே மாதிரி ஒரு டைட்டில்.. அந்தாதூன் தமிழ் ரீமேக்கான அந்தகன் அர்த்தம் தெரியுமா?
சென்னை: பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் பிரசாந்த் மீண்டும், இந்த படத்தின் மூலம் அதிரடி கம்பேக் கொடுக்க உள்ளார்.
ஜோதிகா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய இயக்குநர் ஜே.ஜே. ஃபிரெடரிக் இயக்குகிறார்.

பிரசாந்த் இஸ் பேக்
ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு என தமிழ் சினிமாவையே கலக்கிய நடிகர் பிரசாந்த். மீண்டும் ஒரு சூப்பர் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். பாலிவுட்டில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் ஹீரோவாக மீண்டும் அசத்த உள்ளார்.

450 கோடி வசூல்
கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான அந்ததூன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 450 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
அந்தகன் அர்த்தம்
அந்தாதூன் படத்தை போலவே தமிழிலும் டைட்டில் வைக்கப்பட வேண்டும் என யோசித்த படக்குழு தற்போது இந்த படத்திற்கு அந்தகன் என டைட்டில் வைத்துள்ளது. அந்தகன் டைட்டில் லுக் 2021 புத்தாண்டு தினத்தன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தகன் என்றால் பார்வையற்றவன், யமன் என ஏகப்பட்ட அர்த்தங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தபுவுக்கு பதில்
இந்தியில் நடிகை தபு லீடு ரோலில் நடித்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராயை தமிழில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை சிம்ரன், தபு நடித்த சிமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் படங்களை தொடர்ந்து மீண்டும் பிரசாந்துடன் இணைகிறார். வரும் சம்மருக்கு படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











