Ravi Mohan: கெனிஷாவுக்காக அப்பாவையே ஒதுக்குகிறாரா ரவி மோகன்? பிரபலம் சொல்றது எதுவும் சரியில்லையே?

சென்னை: நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர், இயக்குநர் என தனது சினிமா கெரியரில் அடுத்தடுத்த வளர்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் அவர் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இவர்களுக்கு இன்னும் விவாகரத்து உறுதியாகவில்லை. இந்நிலையில் கெனிஷாவுக்காக நடிகர் ரவி மோகன் தனது குடும்பத்தினரையே மொத்தமாக ஒதுக்கிவிட்டார் என்று வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்த பின்னர், பாடகி கெனிஷாவுடன் மிகவும் நெருங்கிப் பழகி வருகிறார். இருவரும் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகிறார்கள். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதிக்கு ஒன்றாக சென்றிருந்தனர். இப்படி இருக்கும்போது நடிகர் ரவி மோகன் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் ப்ரோ கோட் என்ற படத்தில் தயாரித்து நடிக்கிறார். அதேபோல் தி ஆர்டினரி மேன் படத்தை இயக்கி தயாரிக்கிறார். இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Andhanan Says Ravi Mohan Avoid His Family Functions Because Of Keneeshaa
Photo Credit:

ரவி மோகன் - கெனிஷா: இந்நிலையில் வலைபேச்சு யூடியூப் தளத்தில் அந்தணன் பேசுகையில், ரவி மோகனின் தந்தை தமிழ் திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற எடிட்டர். எடிட்டர் மோகன் என்றால் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சீனியரான எடிட்டர். இப்படி இருக்கும்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் நலமாக உள்ளார். எடிட்டர் மோகனுக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் நடிகர் ரவி மோகன் சிங்கப்பூரில் இருந்துள்ளார். உடன் கெனிஷாவும் இருக்கிறார். இருவரும் ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக பணம் திரட்டும் வேலைகளில் இருப்பதால் உடனே கிளம்பி சென்னை வரமுடியவில்லை. மேலும் எடிட்டர் மோகன் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிட்டாராம்.

குடும்பம்: அதாவது, என்னைப் பார்க்க வருவதென்றால் ரவியை மட்டும் தனியாக வரச்சொல்லி உள்ளாராம். கெனிஷாவை அழைத்து வர வேண்டாம் என்றும் கூறியுள்ளாராம். அதேபோல சில வாரங்களுக்கு முன்னர் ரவி மோகனின் அக்கா பொண்ணுக்கு நிச்சயதார்த்தமாம். அப்போது ரவி மோகனிடம் இதே போல் கெனிஷாவை அழைத்துக் கொண்டு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்களாம். இதனால் ரவி மோகன் தனது அக்கா மகளின் நிச்சயதார்த்ததிற்கு செல்லவில்லையாம்" என்று தெரிவித்துள்ளார். அந்தணன் இவ்வாறு கூறியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சில இணையவாசிகள் குடும்பத்தினரை விட கெனிஷா தான் முக்கியம் என்று ரவி மோகன் நினைக்கிறார் போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X