Vidaamuyarchi: மகிழ் திருமேனி செய்த அட்டகாசங்கள்.. வாட்ஸ் ஆப் Chat இருக்கு.. மிரட்டிவிட்ட அந்தணன்!
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம், விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பே உள்ளது. அதிலும் குறிப்பாக படத்தின் டீசர், டிரைலர், படக்குழு தரப்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள பாடல்கள் என அனைத்தும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி குறித்து அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
விடாமுயற்சி படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் சில பல பிரச்னைகள் ஓடிக்கொண்டு உள்ளது, அதனால்தான் படப்பிடிப்பே முடியாமல் உள்ளது. குறிப்பாக, லைகா நிறுவனம், அஜித், மகிழ் திருமேனி இவர்கள் மூவருக்கும் இடையில் பலப் பிரச்னைகள் இருந்ததாக ஏற்கனவே திரைத்துறையில் தகவல்கள் உலா வந்தது. இந்தத் தகவல்கள் குறித்தும் சில பிரச்னைகள் என்ன என்றும் வலைபேச்சு டீம் தங்களது யூடியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டனர்.

இப்படி இருக்கும்போது, விடாமுயற்சி ரிலீஸ்க்காக பல சேனல்களுக்கு மகிழ் திருமேனி பேட்டி அளித்துக் கொண்டு உள்ளார். இதில் படப்பிடிப்பு தருணங்களில் மகிழ் திருமேனி குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அதிலும் குறிப்பாக தனக்கும் அஜித்திற்கும் இடையில் பிரச்னை, ஒரே காட்சியை பலமுறை எடுத்தார் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். இந்நிலையில் வலைபேச்சு அந்தணன் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஆதாரம்: அதாவது, " நாங்கள் அனைத்தையும் அருகில் இருந்து பார்க்கவில்லை. ஆனால் எங்களுக்கு லைகா நிறுவனத்தில் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்கள், கூறும் விஷயத்தை நாங்கள் தெரிவிக்கின்றோம். நாங்கள் கூறும் தகவலில் 90 சதவீதம் உண்மையும், 10 சதவீதம் உண்மைக்கு மாறான தகவல்களும் கூட இருக்கலாம். அந்த 10 சதவீதமும், ஹியூமன் எரர் தான். ஆனால் மகிழ் திருமேனி படப்பிடிப்புத் தளத்தில் செய்த அட்டகாசங்கள் குறித்து, லைகா நிறுவனத்தில் இருப்பவர்கள் என்னிடம் பேசிய வாட்ஸ் ஆப் Chat உள்ளது காட்டவா?

அஜித்: இதுமட்டும் இல்லாமல், ஒளிப்பதிவாளர் நிரோவ் ஷாவை மாற்றியதுமே அஜித்துக்கு கடும் கோபமும் விருப்பம் இன்மையும் வந்துவிட்டது. அஜித் தனது படங்கள் அனைத்திலும் நிரோவ் ஷா இருக்க வேண்டும் என நினைப்பவர். ஆனால் மகிழ் திருமேனி அவரையே பிரச்னை செய்து மாற்றிவிட்டார். மேலும் அஜித்குமார் போன்ற மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுக்கும் போது 4 முதல் 5 கேமராக்களை வைத்தாவது ஒரு காட்சியை எடுக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு கேமராவை மட்டும் வைத்துக் கொண்டு படம் எடுக்கின்றார் என்றால், மகிழ் திருமேனிக்கு படம் எடுக்கத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.
கோபம்: நாங்கள் நடந்ததைத்தான் சொல்லுகின்றோம். மகிழ் திருமேனி மீதோ, அஜித் மீதோ எங்களுக்கு தனிப்பட்ட பிரச்னை எதுவும் கிடையாது. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விஷயங்களை வெளியே சொன்னால், அவர்களுக்கு கோபம் இருக்கத்தானே செய்யும். ஆனால் நாங்கள் நடந்த உண்மைகளைத்தானே சொன்னோம்" எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











