twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2!

    ஆந்திர முன்னாள் முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்தை மையாகக் கொண்டு உருவாகிறது கழுகு 2 திரைப்படம்.

    |

    சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்தை மையாகக் கொண்டு உருவாகிறது கழுகு 2 திரைப்படம்.

    கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கொடைக்கானல் சூசைட் பாயின்டில் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் உடலை எடுத்து வரும் நபராக கிருஷ்ணா நடித்திருப்பார்.

    இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் கிருஷ்ணாவும், பிந்து மாதவியும் மீண்டும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    முதலமைச்சர்:

    முதலமைச்சர்:

    அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்த முதலமைச்சரையும் தேடுவதற்காக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

    தேடும் வீரர்கள்:

    தேடும் வீரர்கள்:

    அடர்ந்த காட்டுக்குள் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலோடு ராணுவ வீரர்கள் சல்லடை போட்டு தேடுகிறார்கள். எங்கு தேடியும் நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களோ, அதில் பயணம் செய்த முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை.

    போர்க்குணம் மிக்க செந்நாய்கள்:

    போர்க்குணம் மிக்க செந்நாய்கள்:

    காட்டின் பெரும்பகுதியில் தேடுவதற்கு உதவிய உள்ளூர் கிராம மக்கள் காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு வர மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அந்த காட்டு பகுதியில் வாழும் செந்நாய்கள். மிருகங்களிலேயே போர்க்குணம் மிக்க மிருகமென்றால் அது செந்நாய் தான். இரண்டு செந்நாய்கள் சேர்ந்தால் ஒரு சிங்கத்தையே வீழ்த்தி விடும்.

    தனி ஒருவனாக:

    தனி ஒருவனாக:

    உயிருக்கு ஆபத்து என்பதால் உள்ளூர் மக்கள் வர மறுக்க, ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக செந்நாய்களை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா வரவழைக்கப்படுகிறார். ஹெலிகாப்டரை தனி ஆளாக தான் தேடி அதன் நிலையை கண்டுபிடித்து தருவதாக கூறி செந்நாய் காட்டிற்குள் செல்கிறார் கிருஷ்ணா.

    செந்நாய்களோடு சண்டை:

    செந்நாய்களோடு சண்டை:

    ஆரம்ப காட்சியிலேயே மூன்று செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் பிரம்மாண்ட சண்டை காட்சி இடம் பெறுகிறதாம். மூணார் காட்டு பகுதியில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சி, நிச்சயம் மக்களை நுனி சீட்டில் அமரவைக்கும் அளவிற்கு மிரட்டலாக இருக்கும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் படக்குழுவினர்.

    கிராம மக்கள்:

    கிராம மக்கள்:

    ராணுவ வீரர்களின் உடையணிந்த துணை நடிகர்களோடு, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஹெலிகாப்டரை தேடி காட்டிற்குள் நுழையும் ஆரம்ப காட்சியே மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

    வித்தியாசமான யுக்திகள்:

    வித்தியாசமான யுக்திகள்:

    'புலிமுருகன்' படத்தில் புதுவித உத்திகளோடு மோகன்லால் புலியை வீழ்த்துவதை போல வித்தியாசமான உத்திகளை பயன்படுத்தி செந்நாயை கிருஷ்ணா வீழ்த்துவது போன்று காட்சிகள் படத்தில் உள்ளதாம். படத்தின் இறுதி காட்சியிலும் செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் காட்சி படமாக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற போகும் இந்த படத்தின் பட்ஜெட் கிருஷ்ணா நடித்த படங்களிலேயே அதிகபட்ச பட்ஜெட் படமாகும்.

    ஒய்.எஸ்.ஆர். ஹெலிகாப்டர் விபத்து:

    ஒய்.எஸ்.ஆர். ஹெலிகாப்டர் விபத்து:

    ஒருங்கிணைந்த ஆந்திர பிரசேத்தின் முதல்வராக பொறுப்பு வகித்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, கடந்த 2009ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதை மையமாக வைத்து தான் கழுகு 2 படம் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Krishna's Kalugu 2 movie is being made with the backround of real incident of former Andhra CM Y..S.Rajasekar reddy's helicopter accident death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X