twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆந்திராவே அதிருது.. பொன்னியின் செல்வனை கொண்டாடும் டோலிவுட் ரசிகர்கள்.. மணிரத்னத்துக்கு சல்யூட்!

    |

    ஹைதராபாத்: தமிழ்நாட்டை போலவே உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வரும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தற்போது பொன்னியின் செல்வன் படத்தையும் பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

    இயக்குநர் மணிரத்னம் சார் கிரேட் என பப்ளிக் ரிவ்யூவில் பிரபலமான தெலுங்கு ரசிகர்கள் பேசியுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

    வரலாற்றின் பிரம்மாண்டம்..கொண்டாடவேண்டிய தருணம்..பொன்னியின் செல்வன் ரசிகர்களின் கருத்து!வரலாற்றின் பிரம்மாண்டம்..கொண்டாடவேண்டிய தருணம்..பொன்னியின் செல்வன் ரசிகர்களின் கருத்து!

    ராஜமெளலிக்கு பிடித்த கதை

    ராஜமெளலிக்கு பிடித்த கதை

    டோலிவுட்டின் நம்பர் ஒன் இயக்குநர் ராஜமெளலிக்கு ரொம்பவே பிடித்த கதை பொன்னியின் செல்வன். அவரே இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்றும் வெப்சீரிஸ் ஆக பண்ணலாம் என்றும் நினைத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் வெறும் 150 நாட்களுக்குள் இரண்டு பாகங்களையும் முடித்ததை அறிந்து ரொம்பவே ஷாக் ஆகிவிட்டார்.

    பிளானிங் இருந்தால்

    பிளானிங் இருந்தால்

    வெறும் 2.30 மணி நேர படத்துக்கு சரியான திட்டமிடல் மற்றும் நல்ல நடிகர்களின் பட்டாளம் இருந்தாலும் எதையும் சாதிக்கலாம் என்கிற சரியான பிளானிங் தான் மணிரத்னத்துக்கு கை கொடுத்து இருக்கிறது. தோட்டா தரணி செட்டுக்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவுக்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் என தொழில்நுட்ப ரீதியாக படம் நின்னு பேசுகிறது.

    ஆந்திரா அதிருது

    ஆந்திரா அதிருது

    பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விட்டு தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். மேலும், பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் படங்களை கம்பேர் பண்ணாதீங்க இரண்டும் வேறு வேறு பொக்கிஷங்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ப்ரோ பிரபலம்

    ப்ரோ பிரபலம்

    ப்ரோ அந்திரிபோயிந்தி என ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் சொல்லி அந்த ஊரு குட்டி கூல் சுரேஷாக மாறி உள்ள ரசிகரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் மணிரத்னத்தின் மாஸ்டர் மைண்டை பாராட்டி உள்ளார். குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    மற்ற மொழிகளில்

    மற்ற மொழிகளில்

    பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் குறைந்தது 3 நாட்களுக்கு படம் ஹவுஸ்ஃபுல் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்ப்புகளை மீறி கனடாவிலும் படம் வெளியாகி உள்ளது.

    English summary
    Andhra fans praises Mani Ratnam's magnum opus movie Ponniyin Selvan 1 after watching it in theaters. Many fans praises Mani Ratnam's magnum opus movie in social media also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X