என்னது 35 அடியில கட்அவுட்டா... ஆந்திர ரசிகர்கள் செய்த வேற லெவல் சம்பவம்!

ஐதராபாத் : நடிகர் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் சர்க்காரு வாரி பட்டா. இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சர்க்காரு வாரி பட்டா படம்

சர்க்காரு வாரி பட்டா படம்

நடிகர் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக இணைந்துள்ள படம் சர்க்காரு வாரி பட்டா. கீதா கோவிந்தம் என்ற ஜாலியான படத்தை இயக்கிய பரசுராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் பாபு தெலுங்கு பட உலகின் சூப்பர்ஸ்டாராக இருந்துவரும் நிலையில், இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே தற்போது பெற்றுள்ளது.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளிப் போன நிலையில், நேற்றைய தினம் ரிலீசானது. இந்தப் படம் கீதா கோவிந்தம் போல சிறப்பாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் மிகவும் மோசமான திரைக்கதையை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்தடுத்த ப்ளாப்

அடுத்தடுத்த ப்ளாப்

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. முன்னதாக சூப்பர்ஸ்டாருடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த அண்ணாத்த படமும் அவருக்கு கைக்கொடுக்காத நிலையில் தற்போது இந்தப் படமும் அந்தவகையில் இணைந்துள்ளத.

 மிரட்டலான சாணிக் காயிதம் படம்

மிரட்டலான சாணிக் காயிதம் படம்

ஆனால் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான சாணிக் காயிதம் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. அவர் அந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

 35 அடியில் கீர்த்திக்கு கட்அவுட்

35 அடியில் கீர்த்திக்கு கட்அவுட்

இந்நிலையில் முன்னதாக சர்க்காரு வாரி பட்டா படத்தின் ரிலீசையொட்டி, ஆந்திராவில் மகேஷ் பாபு ரசிகர்கள் ஆங்காங்கே அவருக்கு கட்அவுட்களை வைத்திருந்தனர். அந்த வகையில் ஆந்திராவின் சுதர்சன் திரையரங்கில் கீர்த்தி சுரேஷிற்கும் 35 அடியில் கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது.

 ஹீரோயினுக்கு கட்அவுட்

ஹீரோயினுக்கு கட்அவுட்

வழக்கமாக சூப்பர் ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகும்போது அவரது ரசிகர்கள் கட்அவுட் வைப்பார்கள். ஆனால் முதல்முறையாக படத்தின் ஹீரோயினுக்கும் கட்அவுட் வைத்து ஆந்திர ரசிகர்கள் அசத்தியுள்ளனர். இந்த கட்அவுட் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் கலாவதி என்ற கேரக்டரில் கீர்த்தி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X