அட பாவமே...சன்னி லியோன் என்ன பூசணிக்காயா? இப்படியா அவர யூஸ் பண்ணுவீங்க
ஐதராபாத் : கடைசியாக நவாசுதின் சித்திக் நடித்த Motichoor Chaknachoor படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இளசுகளின் மனசை சுண்டி இழுத்தார் சன்னி லியோன். பாலிவுட்டின் கவர்ச்சி க்யூன் ஆன சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சன்னிலியோனின் பேனரை வைத்து விவசாயி ஒருவர் செய்த காரியம் பலரையும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் பட வைத்துள்ளது. இருந்தாலும் அவர் புத்தி கூர்மையையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

கவனத்தை ஈர்த்த பயிர்கள்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி. விவசாயியான இவர் 10 ஏக்கரில் முட்டைகோஸ், காளிஃபிளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். நன்கு செழித்து வளரும் இவர்களின் பயிர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வித்தியாசமாக யோசித்த விவசாயி
இதனால் கண் திருஷ்டி படுவதாக நினைத்த அங்கினபல்லி சென்சு ரெட்டி, அந்த கிராமத்தினர் மற்றும் தனது விவசாய நிலம் வழியாக கடந்து செல்பவர்களின் தீய பார்வை தனது நிலத்தின் மீது படாமல் இருக்க வித்தியாசமாக ஐடியா ஒன்றை யோசித்தார்.

அப்படி என்ன தான் செய்தார்
இந்த ஐடியாவால் இப்போது இவரின் நிலத்தை யாரும் பார்ப்பதில்லையாம். இதனால் அங்கினபல்லி சென்சு ரெட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளார். மற்றவர்களின் பார்வை படாமல் இருக்க இவர் செய்த ஐடியா தான் இப்போது அனைவரையும் ஈர்த்துள்ளது.
Recommended Video

அட இது கூட நல்லாயிருக்கே
அப்படி அவர் என்ன செய்தார் என கேட்கிறீர்களா? தனது நிலத்தை சுற்றி பல இடங்களில் நடிகை சன்னி லியோனின் ஆள் உயர போஸ்டரை தான் வைத்துள்ளார். அதுவும் சன்னி லியோனின் பிகினி ஃபோட்டோவை வைத்துள்ளார். இப்போது இவரின் நிலத்தை கடந்து செல்பவர்களின் பார்வை நிலத்தை பார்ப்பதற்கு பதிலாக சன்னி லியோனை தான் பார்க்கிறதாம்.

வருத்தப்படும் சன்னி லியோன் ரசிகர்கள்
அட இது கூட நல்லா இருக்கே என பலரும் பாராட்டினாலும், சன்னி லியோனை இப்படி திருஷ்டி பூசணிக்காயை போல் பயன்படுத்தியதற்கு சன்னி லியோனின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











