twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்... ஆந்திர இஸ்லாமிய தலைவர் கோரிக்கை

    By Sudha
    |

    Kamal Haasan
    ஹைதராபாத்: இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக் காட்சிகளை வைத்து விஸ்வரூபம் படத்தைத் தயாரித்துள்ள கமல்ஹாசனைக் கைது செய்ய வேண்டும் என்று ஆந்திராவைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் பசாவ் டெஹ்ரீக் என்ற அமைப்பின் அம்ஜத் உல்லா கான் என்பவர் கூறுகையில், படத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் எதிரான காட்சிகளை வைத்துள்ளார் கமல்ஹாசன். இப்படம் தடை செய்யப்பட வேண்டும். கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.

    கர்நாடக போலீஸ் அதிகாரிகள் படம் பார்க்கிறார்கள்

    இதற்கிடையே, விஸ்வரூபம் படத்திற்கு கர்நாடகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடகத்திலும் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்ட மாநில விநியோகஸ்தரான கங்கராஜு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

    English summary
    Andhra Islamic leader Amjed Ullah Khan has sought the police to arrest actor Kamal Haasan for his movie Viswaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X