twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்!

    ஆந்திரா மெஸ் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் தான் வேதை என அதன் இயக்குனர் ஜெய் கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    யோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ

    சென்னை: தன் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என ஆந்திரா மெஸ் இயக்குனர் ஜெய் தெரிவித்துள்ளார்.

    சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் உருவாகியிருக்கும் படம் "ஆந்திரா மெஸ்". நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி..

    இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.

     ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பரத்

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பரத்

    "ஷோ போட் ஸ்டுடியோஸ்" சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்", "ரிச்சி" போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

     யாரோ தீர்மானிக்கிறார்கள்

    யாரோ தீர்மானிக்கிறார்கள்

    இந்த படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஜெய், நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை சம்மந்தமே இல்லாத வேறு யாரோ தீர்மானிக்கிறார்கள் என கடுமையாக சாடினார்.

     நிறைய மெனக்கெட்டிருக்கிறோம்

    நிறைய மெனக்கெட்டிருக்கிறோம்

    இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம். ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள். அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.

     அடுத்த கட்டத்திற்கு உயர்வது கடினம்

    அடுத்த கட்டத்திற்கு உயர்வது கடினம்

    தமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது.

     எப்படி விமர்சித்தாலும் ஓகே

    எப்படி விமர்சித்தாலும் ஓகே

    இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு". இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    The Andhra mess movie director Jai has welcomed all types of criticism, mostly negetive for his film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X