விஜய் CM ஆவாரா?.. தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும்,. விஜய்க்கு பிரபல நடிகர் அட்வைஸ்!
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் அரசியல் வசனங்கள் இருக்கிறதோ இல்லையோ, அவர் பேசும் பேச்சுக்கள் அரசியலாகவே பார்க்கப்படுகிறது. அவர் தொடங்கியுள்ள தவெக கட்சிக்கு தமிழ்நாட்டில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. இருப்பினும் அவர் வெளியிடும் அறிக்கைகள் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்நிலையில், விஜய் சிஎம் ஆவாரா என்ற கேள்விக்கு, ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யான் அளித்திருக்கும் பதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் 60களிலேயே சினிமாவில் இருந்து காெண்டு அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எம்ஜிஆர். அவருக்கு முன்னரே அறிஞர் அண்ணா இருக்கிறார். எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, சிவாஜி, அண்ணா, போன்றோர் சினிமாவில் பிரபலமடைந்து அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். தற்போது அவர்களது வரிசையில் விஜய் இடம்பிடிப்பாரா என்பது 2026 தேர்தலின் ரிசல்ட்டை பொறுத்தே அமைகிறது.

விஜய் கட்சி தொடங்கிய பின்பு வந்தவர் போனவர்கள் எல்லாம் விமர்சிக்க தொடங்கிவிட்டனர் அரசல் புரசலாக சிலர் பேசுகின்றனர்.குறிப்பாக சமீபத்தில் மும்மொழிக்கொள்கை சம்பவம் இந்தியா முழுக்க பூதாகரமாக வெடித்தது. இதற்கு பவண் கல்யாண் ஆத்திரத்தில் விஜயை விமர்சித்து பேசியிருந்தார். விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டியது தானே. ஏன், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்து வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறீர்கள் என மிரட்டும் தொணியில் பேசினார். கட்சிதான் ஆரம்பித்திருக்கிறார், அதற்குள் இப்படி மக்களை ஏமாற்றலாமா என வார்த்தகளை அள்ளி வீசிவிட்டார்.
பவண் கல்யாணும் நடிகராக கரியரை தொடங்கி பின்னர் ஜனசேனா கட்சி தொடங்கி இப்போது ஆந்திர துணை முதல்வராக அரசியலில் வெற்றி கண்டுள்ளார். அவரே விஜயை இப்படி பேசலாமா என கேள்விகளும் எழுந்தன. ஆனால் அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பாரா பவண், படத்தில் சீறிக்கொண்டு பேசுவது போலவே அரசியலிலும் பேசி வருகிறார். படத்தில் நடித்தபோது இல்லாத விமர்சனம் விஜய் அரசியல் தொடக்கம் தான் பலருக்கும் புளியை கரைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜய் சிஎம் ஆவாரா: வடிவேலு கூறுவது போல் கட்சி நடத்துறியா அராஜகம் பன்றியா என்றும் பவண் கல்யாணை பார்த்து கேட்கவும் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், விஜய் அரசியல் தெளிவு குறித்தும் அவர் தமிழ்நாட்டின் சி.எம் ஆவாரா என்பது குறித்தும் பவண் கல்யாண் அளித்திருக்கும் பேட்டிதான் கொளுந்து விட்டு எரிகிறது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஒரு நடிகராக இருந்துகொண்டு திடீரென சிஎம் ஆகிவிட முடியாது. அதற்கு வழியை பயன்படுத்த முடியாது. அன்றைக்கு என்டிஆருக்கு நடந்தது போன்று இன்று கிடையாது. எல்லோரும் எதிரியாக மாறுவார்கள்.

விஜய்க்கு அட்வைஸ்: ஆகவே முதலில் நிலைத்து நிற்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை கண்டிப்பாக பாதிக்கும். எனவே, விஜய்க்கு நிறைய அனுபவம் இருக்கிறது. நான் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஈபிஎஸ், விஜய் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகுமா என்று தெரியவில்லை. இயற்கையாக உருவாகாமல் அரசியல் கணக்குக்காக கூட்டணியை உருவாக்கினால், இரு பக்கமும் ஓட்டு பகிர்வு நடக்குமா என்பது சந்தேகம் என பவண் கல்யாண் தெரிவித்திருக்கிறார். மேலும், விஜய் இன்னும் பயணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











