twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைப்பள்ளி.. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு ஆந்திர அரசு அசத்தல் கவுரவம்.. அமைச்சர் தகவல்!

    By
    |

    சென்னை: ஆந்திர அரசின் இசைப் பள்ளிக்கு, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த செப்டம்பர் மாதம், 25 ஆம் தேதி மரணமடைந்தார்.

    கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், 51 நாட்கள் சிகிச்சையில் இருந்தார்.

    அரசு மரியாதை

    அரசு மரியாதை

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணமடைந்தார். அவர் உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில், அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் மறைவு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    தேசிய விருது

    தேசிய விருது

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது, தாதா சாகேப் பால்கே விருது, அவர் பெயரில் தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், அதற்கு மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.

    இசைப் பள்ளி

    இசைப் பள்ளி

    இந்நிலையில், ஆந்திர அரசின் இசைப் பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்ட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கவுதம் ரெட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார்.

    பெயர் மாற்றம்

    பெயர் மாற்றம்

    அவர் கூறும்போது, பாடகர் எஸ்.பி.பி, புகழ்பெற்ற பாடகர். அவருடைய பல்வேறு இசை திறமைகளை அங்கீகரிக்கிறோம். இதையடுத்து, நெல்லூர் அரசு இசை மற்றும் நடனப் பள்ளிக்கு, டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என்று பெயரை மாற்றி வைக்க முடிவு செய்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    SPB என்னும் மூன்று எழுத்து • கலங்கிய Chithra, Parthiban, Vetrimaran
    உண்மை அஞ்சலி

    உண்மை அஞ்சலி

    இந்த அறிவிப்பு எஸ்.பி.பி.யின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர், லெஜண்டரி பாடகரான எஸ்.பி.பிக்கு ஆந்திர அரசு செய்திருக்கிற உண்மையான அஞ்சலி இது. அவர் பூர்வீக வீடு இருக்கும் சாலைக்கு அவர் பெயர் வைக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, எஸ்.பி.பியின் மகன் சரண் நன்றி தெரிவித்துள்ளார்.

    English summary
    Andhra Pradesh's Minister Mekapati Goutham Reddy, took to Twitter to announce that a music school at Nellore will be named after legendary singer SP Balasubrahmanyam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X