Sri Reddy: சந்திரபாபு, பவன்கல்யாண் குறித்து மோசமான பேச்சு.. நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு!

சென்னை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சில அமைச்சர்கள் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி தரக்குறைவான மற்றும் அவதூறான கருத்துகளை சோஷியல் மீடியாவில் பரப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீ ரெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

நடிகை ஸ்ரீ ரெட்டி திரைப்படங்களை தாண்டி, தனது சர்ச்சையான கருத்துக்களால் பிரபலமானார்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹைத்ராபாத்தில் நடு ரோட்டில் மேலாடை இல்லாமல் போராட்டம் நடத்தி அனைவரையும் திக்குமுக்காடவைத்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார். நானி, லாரன்ஸ், விஷால், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என பலரது பெயர்களை அடுத்தடுத்து கூறி, கூறி கோலிவுட் சினிமா மற்றும் டோலிவுட் சினிமாவை அதிவைத்தார். இவர் யாரை காலி பண்ண போகிறாரோ என்ற பீதியில் திரையுலகமே பயந்து இருந்தது.

sri reddy

ஸ்ரீ ரெட்டி விரைவில் கைது: இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அனிதா ஆகியோர் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைதளங்களில் அநாகரிகமான பதிவுகளை பதிவிட்டுவந்தார். தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தனி நபர் மீது மிகவும் அநாகரிகமாக விமர்சனம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகை ஸ்ரீ ரெட்டி மீது குடிவாடா, அனகாபல்லி, ராஜமுந்திரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர் மீது போலீஸார், வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அவருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.இதைத்தொடர்ந்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நற்பெயருக்கு கலங்கம்: அதே போல பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவ மீது தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம், தெலுங்கு தேசம் கட்சியையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அவரது மகன் நரா லோகேஷ், மருமகள் ப்ராமினி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரது புகைப்படங்களையும் மார்ஃபிங் செய்து வெளியிட்டு அவர்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் மடிப்பாடு காவல்நிலையத்தில் ராம் கோபால் வர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X