சர்ச்சைக்குரிய படம் தான் வெற்றி பெறும்… நடிகர் ராதா ரவி பேச்சு !
சென்னை : சர்ச்சைக்குரிய படம் தான் வெற்றி பெறும் என்று ஆன்டி இந்தியன் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவி பேசினார்.
Recommended Video
ஆன்டி இந்தியன் திரைப்படம் டிசம்பர் 3ந் தேதி வெளியாகி உள்ளது.
ஆன்டி இந்தியன்'திரைப்படத்தில் 38 கட் கொடுத்து, தணிக்கைக் குழு அப்படத்தை நிராகரித்தது. நீதிமன்றத்தை நாடி எந்த கட்'டும் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெற்றார் இயக்குனர் ப்ளூ சட்டை மாறன்.

இசை வெளியீட்டு விழா
ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டு விழா
ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நான் பயப்படவில்லை
இதில் பேசிய ராதாரவி, ஆன்டி இந்தியன் திரைப்படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று பல முறையோசித்தேன். எதிர்ப்பை பார்த்து நான் பயப்படவில்லை எனக்கு இல்லாத எதிர்ப்பா புளு சட்டை மாறனுக்கு இருக்க போகிறது. முன்பெல்லாம் படம் எடுக்க வேண்டுமென்றால் லொக்கேஷன் பார்க்க வேண்டும், பணம் வேண்டும். ஆனால் இப்போது அதனுடன் புதிய பிரச்சினைகளும் சேர்ந்து கொள்கின்றன. இப்படி காட்சி வைத்தால் இவர்கள் என்ன சொல்வார்களோ, அவர்கள் என்ன சொல்வார்களோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.

நல்ல கதை
ஆன்டி இண்டியன் கதை நல்ல கதை இன்றைக்கு இருக்கும் அரசியல் நிலையை அப்பட்டமா மாறன் எடுத்துக்கூறி உள்ளார். நான் மாறனிடம் இந்தப் படம் நிச்சயமாக ஓடும் என்று கூறினேன். சர்ச்சைக்குரிய படங்கள் தான் இப்போது ஓடுகின்றன. மாறன் இந்த படத்தின் அற்புதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய பெயர்
ஆன்டி இண்டியன் என்ற பெயரே பிரச்சினைக்குரிய ஒரு பெயர். இந்த படத்திற்கு 38 கட்டுகள் கொடுக்கப்பட்டு பின் நிராகரிக்கப்பட்ட படம், நீதிமன்றம் சென்று வாதாடி வென்ற ஒரு திரைப்படம் இது. மற்றவர்கள் திட்டுவதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. பிறரின் திட்டு தான் நம் வளர்ச்சி என்றார்.

தியேட்டரிலேயே விட்டுவிடுங்கள்
மேலும் , பேசிய ராதா ரவி, நடிகர் சூர்யா, சிங்கம் 1, 2, 3 என்ற படத்தில் போலீசை நல்லவராக காட்டினார் என்றார். படத்தை பார்த்துவிட்டு, படத்தோட கருத்துக்களை சினிமா தியேட்டரிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போக வேண்டும். அதுதான் சிறந்தது என்று ஜெய் பீம் திரைப்படத்தின் பெயரை குறிப்பிடாமல், அப்படம் குறித்து பேசினார். உண்மை கதை என்று பெயர்களை மாற்றி எடுக்கக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படி பல படங்களை எடுக்க முடியும். தற்போதைய சூழலில் ஓடிடி யில் நிறைய படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இன்னும் 5 ஆண்டுகள் கழித்து, நடிகர்களின் சம்பளத்தை ஓடிடி நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கப் போகின்றன.


Click it and Unblock the Notifications











