காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்... கூடுதல் அழகாக்கும் நடிகை ஆண்ட்ரியா!
சென்னை :மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் அதில் தன்னை ஒப்புக்கு சப்பாகவே பயன்படுத்தியுள்ளார்கள் என பெரும் வருத்தத்தில் உள்ளாராம் நடிகை ஆண்ட்ரியா.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டில் நடித்து வரும் ஆண்ட்ரியா இதில் வித்தியாசமான பேயாக நடித்து வருகிறாராம்.
காஷ்மீருக்கு ஜாலி ட்ரிப் சென்ற இடத்தில் காஷ்மீரை அழகாக்கும் அளவிற்கு கலர்ஃபுல்லாக புகைப்படங்களை வெளியிட்டு காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் என பாடி வைரலாகி வருகிறார் ஆண்ட்ரியா.

இரண்டாம் பாகம்
பாடகியாகவும் நடிகையாகவும் பல கோடி ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்து கனவுக் கன்னியாக இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடித்து வருகிறார். சைலன்ட்டான படங்கள் நடிகர்களிடம் யதார்த்தமான நடிப்பை எதிர்பார்க்கும் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்தபடம் ஆண்ட்ரியாவுக்கு மற்றுமொறு திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

புலம்புகிறார்
விஜய், விஜய் சேதுபதி ஒன்றாக இணைந்து கலக்கிய மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று உலக அளவில் வசூல் சாதனை புரிந்தாலும் அதில் நடித்ததற்காக ஆண்ட்ரியா பீல் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் எனக்கூறிவிட்டு கடைசியாக ஒப்புக்கு சப்பாக பயன்படுத்தி விட்டார்கள் என புலம்புகிறார் எனவும் கூறப்படுகிறது.

தயாராக உள்ளேன்
எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தன்னை ஒரு சிறந்த பாடகியாக நிரூபித்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு தரமணி, வடசென்னை படங்கள் சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது. சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக கூறிவரும் இவர் இப்பொழுது நோ என்ட்ரி, வட்டம், மாளிகை,அரண்மனை 3, பிசாசு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அழகாக்கும் ஆண்ட்ரியா
மற்ற நடிகைகளிடம் இருந்து தனிச் சிறப்பைப் பெற்றுள்ள ஆண்ட்ரியா கவர்ச்சியிலும் தாறுமாறு செய்து வர இப்பொழுது காஷ்மீர் சென்ற இடத்தில் க்ளிக்கிய சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். சிகப்பு ஸ்வெட்டர் பிளாக் பேன்ட் உடன் குளிர் குல்லா மற்றும் கூலிங்கிளாஸ் என பார்க்கவே கலக்கலாக இருக்க காஷ்மீரில் பனிப்பொழிவு மற்றும் நீரோடை என இரண்டும் ஒரே இடத்தில் இருக்கும் அட்டகாசமான பிலேசில் காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் என பாடிக்கொண்டே காஷ்மீரை மேலும் அழகாக்கும் ஆண்ட்ரியாவின் இந்த காஷ்மீர் ட்ரிப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications