புத்தகத்தை வெளியிடக்கூடாது.. மீண்டும் கொலை மிரட்டல்.. தவிக்கும் ஆண்ட்ரியா!
Recommended Video
சென்னை: நடிகை ஆண்ட்ரியாவுக்கு தொடரும் கொலை மிரட்டலால் அவர் தன்னை துன்புறுத்திய நபரின் பெயரையும் புத்தகத்தையும் வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்.
நடிகை ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம், தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
வட சென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகமல் இருந்த ஆண்ட்ரியா, சினிமா விழாக்களிலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்துகொண்டார் ஆண்ட்ரியா.

திருமணமான நபர்
அப்போது புரோக்கன் விங்ஸ் என்ற தலைப்பில் சோகக் கவிதையை வாசித்த அவர், தனது வாழ்க்கையில் சந்தித்த துயரத்தையும் பகிர்ந்து கொண்டார். அதாவது, திருமணமான ஒரு நபருடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும் அந்த நபர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறினார்.

ஆயுர்வேத சிகிச்சை
அதன் காரணமாகதான் தான் சினிமாவில் இருந்து கடந்த சில நாட்களாக ஒதுங்கியிருந்ததாகவும், அந்த நபரால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளானதால் ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார்.

புத்தகத்தில் விளக்கம்
இதனை தொடர்ந்து அந்த நபர் யாராக இருக்கும் என யூகித்த ரசிகர்கள் ஆண்ட்ரியாவிடமே அது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, அந்த நபரை பற்றிய விவரங்களை தன்னுடைய புரோக்கன் விங் புத்தகத்தில் தெரிவித்திருப்பதாக கூறினார்.

ரசிகர்கள் காத்திருப்பு
இதனை தொடர்ந்து அந்த புத்தகத்தை வெளியிடப் போவதாக ஒரு தேதியை குறிப்பிட்டார். அந்த நாளில் புத்தகம் வெளி வந்துவிடும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

திணறும் ஆண்ட்ரியா
ஆனால் சம்பந்தப்பட்ட அந்த நபரிடமிருந்து வந்த கொலை மிரட்டல் காரணமாக புத்தகத்தை வெளியிட முடியாமல் திணறி வருகிறார். ஒவ்வொரு முறையும் புத்தகத்தை வெளியிட ஆண்ட்ரியா முயற்சிக்கும் போதெல்லாம், அந்த நபரிடம் இருந்து வரும் மிரட்டல் காரணமாக புத்தகம் வெளியிடப்படுவது தடைப்பட்டு வருகிறது.

மீண்டும் மிரட்டல்
தற்போது அரசியலிலும் சினிமாவிலும் தொடர்புடைய அந்த நபரின் எதிர்ப்பையும் மீறி புத்தகத்தை வெளியிடும் முயற்சியில் ஆண்ட்ரியா ஈடுபட்டார். ஆனாலும் புத்தகம் வெளியாகவில்லை. அவருக்கு மீண்டும் மிரட்டல்கள் வந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











