சிபிராஜ் உடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா கூடவே அதுல்யா ரவி

சென்னை: நடிகர் சிபிராஜ் நடிப்பில் கமலக்கண்ணன் இயக்கும் புதுப்படத்தில் கதாநாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிபிராஜ் தமிழ் திரைத்துறையில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2010ஆம் ஆண்டில் சிபிராஜ் நடித்த நாணயம் திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இதனால், அவருடைய சினிமா மார்கெட் அதளபாதாளத்தில் விழுந்தது.

Andrea and Athulya Ravi joins with Sibiraj in New Film

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மக்களின் கவனம் ஈர்த்தார். இதற்கு பிறகு போக்கிரி ராஜா திரைப்படத்தில் முதல் முறையாக வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் தனது தந்தையுடன் நடித்த ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களைப் போல் மீண்டும் தனது தந்தை சத்யராஜுடன் களம் இறங்கினார் நடிகர் சிபிராஜ். தந்தை சத்யராஜுடன் இணைந்து ஜாக்சன் துரை திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு மார்க்கெட் உயர்ந்தது.

Andrea and Athulya Ravi joins with Sibiraj in New Film

பின்னர் அவரது தந்தை நடித்த பாகுபலி திரைப்படத்தின் கதாப்பாத்திரமான கட்டப்பா என்ற பெயரில் கட்டப்பாவ காணோம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பின்பு அவர் கடைசியாக நடித்த சத்யா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அதே பாணியில் மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மதுபானக்கடை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன். அந்தப் படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காத கமலக்கண்ணன், தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு நடிகர் சிபிராஜை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

Andrea and Athulya Ravi joins with Sibiraj in New Film

இந்த திரைப்படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது.

இதனிடையே சிபிராஜ் ரங்கா, மாயோன், வால்டர், ரேஞ்சர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X