சிம்புவின் முன்னாள் காதலி ஹன்சிகாவோ, டாப்ஸியோ இல்லை ஆண்ட்ரியாவாம்!
சென்னை: இது நம்ம ஆளு படத்தில் சிம்புவின் முன்னாள் காதலியாக ஆண்ட்ரியா நடிக்கிறாராம்.
சிம்பு தயாரித்து நடிக்கும் படம் இது நம்ம ஆளு. பசங்க பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் டீஸர் தயாரிப்பு வேலைகள் துவங்கிவிட்டன. படத்தில் சிம்புவின் மனைவியாக அவரது முன்னாள் காதலி நயன்தாரா நடித்து வருகிறார்.
பல ஆண்டுகள் கழித்து இவர்கள் ஜோடி சேர்ந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.

நன்றாக இருக்கிறது
சிம்பு, நயன்தாரா படத்தில் ஜோடியாக உள்ள புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு சொல்வார்களே அது மிகவும் சூப்பராக உள்ளது.

முன்னாள் காதலி
கதைப்படி சிம்புவுக்கு காதலி உண்டு. இந்த கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை.

டாப்ஸி
சிம்புவின் காதலியாக நடிக்குமாறு டாப்ஸியை கேட்டுள்ளனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஏன்?
டாப்ஸி நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான் டாப்ஸி இது நம்ம ஆளு படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

ஆண்ட்ரியா
டாப்ஸி நடிக்க மறுத்ததையடுத்து அந்த கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் கெஸ்ட் கதாபாத்திரத்தில் வந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











