பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. வாய் பிளந்த கோலிவுட்

சென்னை: பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறார்.

பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா தமிழில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். அதன் பிறகு கண்ட நாள் முதல் நடிக்கவும் ஆரம்பித்தார். முதல் படத்தில் நடிகையாக ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும் இரண்டாவது படமான பச்சைக்கிளி முத்துச்சரம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை எடுத்துக்கொடுத்தது.

ஆயிரத்தில் ஒருவனில் கலக்கிய ஆண்ட்ரியா

ஆயிரத்தில் ஒருவனில் கலக்கிய ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நல்ல பெயர் வந்ததால் அவருக்கு படவாய்ப்புகள் அதிகம் வரத்தொடங்கின. அதன்படி செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தி ஒருவன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வரலாற்று ஆய்வாளர் கதாபாத்திரத்தை ஏற்று அதில் தனது சிறப்பான நடிப்பை வழங்கினார். அதனையடுத்து அஜித்தின் மங்காத்தா படத்திலும் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார்.

கமல் ஹாசனுடன் மூன்று படங்களில் ஆண்ட்ரியா

கமல் ஹாசனுடன் மூன்று படங்களில் ஆண்ட்ரியா

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட்டாக கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கமல் ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் விஸ்வரூபம் படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றன. இருப்பினும் ஆண்ட்ரியா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2

இந்தச் சூழலில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் உருவாக்கியுள்ளார். அந்தப் படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்க விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பன்மடங்கு இருக்கிறது. ஆனால் படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பிசாசு 2 டீசர்

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பிசாசு 2 டீசர்

இருப்பினும் கடந்த வருடம் பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சிறுவர்களும் படத்தை பார்க்க வேண்டும் என்பதால் பிசாசு 2வில் இருந்த நிர்வாண காட்சிகளை நீக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆண்ட்ரியாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம்

ஆண்ட்ரியாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம்

இந்நிலையில் பிசாசு 2 படத்தில் நடிப்பதற்காக ஆண்ட்ரியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தில் ஏகப்பட்ட அடல்ட் காட்சிகள் இருப்பதாலும், அதில் ஆண்ட்ரியா துணிந்து நடித்ததாலும்தான் அவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X