‘தரமணி’ ஆண்ட்ரியாவின் திறமையை வெளிக் கொண்டு வரும்: இயக்குநர் ராம்
சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படமான 'தங்க மீன்கள்' படத்தை அடுத்து இயக்குனர் ராம், இயக்கும் படத்திற்கு 'தரமணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க, வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
தரமணி படத்திற்கான ஒரு பாடல் காட்சி ஏற்கனவே படமாக்கப் பட்டு விட்ட நிலையில், அடுத்தாண்டு ஜனவரியில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தரமணி படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ராம் கூறியதாவது...

நகர்ப்புறக்காதல்...
உலகமயமாக்கலின் நடைபெறும் ஒரு நகர்ப்புறக் காதல் கதையாக இப்படத்தை சித்தரித்துள்ளேன்.

நிரந்தரக்காதல்...
மோதல், காமம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளின் இடையே ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் நிரந்தரமான காதல் குறித்து இதில் சொல்லவிருக்கிறேன்.

திறமையான நடிகை....
இப்படத்தின் நாயகியாக நடித்து வரும் ஆண்ட்ரியாவின் திறமைகள் திரைத்துறையில் குறைவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முக்கியமான நடிகை...
இந்த படம் ஆண்ட்ரியாவின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமையும். இவர் திரையுலகின் ஒரு முக்கியமான நடிகை' எனக் கூறியுள்ளார் ராம்.


Click it and Unblock the Notifications











