வடசென்னையை தொடர்ந்து மீண்டும் நிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா.. எந்த படத்தில் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் போல்டான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.
தனுஷின் வடசென்னை படத்தில் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார்.
இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்திலும் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கொரோனா பாதிப்பு
இந்திய மக்கள் பலரையும் வாட்டி வதைத்து வரும் கொரோனா பாதிப்பில் இருந்து நடிகை ஆண்ட்ரியாவும் தப்பவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக தனது வீட்டிலேயே தனிமைப்பட்டுக் கிடந்த நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் பூரணமாக குணமானார்.

கடைசியாக மாஸ்டர்
தளபதி விஜய்யுடன் முதன் முறையாக மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா. வாத்தி கம்மிங் பாடலுக்கு தோழியாக வந்து குத்தாட்டம் போடும் அவர், கடைசி கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்யுடன் இணைந்து வில் கொண்டு லாரிகளை பறக்கவிடும் காட்சிகள் மாஸ் காட்டியது.

பிசாசு 2
அரண்மனை 3ம் பாகம் பிசாசு 2 என நடிகை ஆண்ட்ரியா ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், ஆண்ட்ரியா அந்த படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளதாக தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் மேலும், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

நிர்வாணமாக
ஆடை படத்தில் அமலா பால் முழு நிர்வாணமாக ஆடையே அணியாமல் நடித்து மிரட்டி இருந்தார். மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ படத்தில் அந்த படத்தின் வில்லன் நிர்வாணமாக குளிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில், பிசாசு 2 படத்தில் சுமார் 15 நிமிடங்கள் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

வடசென்னை படத்திலும்
முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் இயக்குநர் அமீருடன் முதலிரவு காட்சியில் நடித்த ஆண்ட்ரியா அரை நிர்வாணமாக நடித்திருந்தார். என்னடி மாயாவி பாடலில் இடம்பெற்றிருந்த அந்த காட்சிக்கு வடசென்னை மக்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பு காரணமாக அந்த காட்சி பின்னர் நீக்கப்பட்டு வேறு காட்சிகள் இணைக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் ஆண்ட்ரியா நிர்வாணமாக பிசாசு 2 படத்திற்காக நடித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











