'இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இப்படி இருக்காங்க'..வட்டம் படத்தின் மிரட்டலான டிரைலர்!

சென்னை : சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.

ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வட்டம் திரைப்படத்தை கமலக்கண்ணன் இயக்கி உள்ளார்.

அதுல்யா ரவி, மஞ்சுமா மோகன், சமுத்திரக்கனி, பாலசரவணன் சைத்ரா ரெட்டி, ஆகியோர் நடித்துள்ளனர்.

சிபிராஜ்

சிபிராஜ்

சிபி ராஜ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாயோன் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது சிபிராஜ், ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் திகில் கதையம்சம் கொண்ட படமாகும். இப்படத்தில் சிபிராஜ் லீட் ரோலில் நடித்துள்ளார்.

ஏமாற்றப்படும் சிபிராஜ்

ஏமாற்றப்படும் சிபிராஜ்

வாழ்க்கையில் பெரியதாக எந்த லட்சியமும் இல்லாமல், வாழக்கையை அதன் போக்கில் வாழ்ந்து வரும் சிபிராஜ். இந்த நேரத்தில் காதலித்து பெண்ணால் ஏமாற்றப்படுகிறர். ஒருவருக்கு ஒருவர் எந்த சம்பந்தம் இல்லாதவர்கள் வாழ்க்கையின் உள்ளே 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பாடும் பாதிப்புகளும் தான் வட்டம் திரைப்படத்தின் கதை. இத்திரைப்படம் ஜூலை 29ஆம் தேதி டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மிரட்டலான டிரைலர்

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. அதில், சிபிராஜ் சோகத்துடன் இந்த பொண்ணுங்க ஏன் பணம் பணம்னு அலையுறாங்க என்ற வசனத்துடன் டிரைலர் ஆரம்பமாகிறது. இதையடுத்து, இதையடுத்து, கார், பைக் சேஸிங்கை தொடர்ந்து, பணத்தை கொள்ளையடிப்பதும், காவல்துறை விசாரணை நடத்துவதும் என டிரைலர் மிகவும் மிரட்டலாக உள்ளது.

பெண் எல்லாம் ஏன்

பெண் எல்லாம் ஏன்

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா "இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இப்படி இருக்காங்க' என்ற படத்தில் தொடங்கி, ஒரு பொண்ணு எவ்ளோ பெரிய ஆள் ஆனாலும், அவ ஒரு பொண்ணு. அவள் தாம்பத்யத்துக்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் மட்டுமே எனவசனத்துடன் டிரைலர் முடிவடைகிறது. மதுபானக்கடை விமர்சன ரீதியாக பாராட்டுப்பெற்ற கமலக்கண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ஜூலை 29-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X