ஆண்ட்ரியாவோட அடுத்த கச்சேரி.. ஜோஷ் உடன் இணைந்து கொண்டாட்டம்.. எங்கே? எப்போ தெரியுமா?
ஓசூர்: நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தொடர்ந்து வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், Josh செயலியுடன் இணைந்து அவர் நடத்தப் போகும் பிரம்மாண்ட இசைக்கச்சேரி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீடியா சர்க்கிள் மற்றும் ஜோஷ் ஆப் இணைந்து இந்த இசைக்கச்சேரியை பெரியளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமான ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக போல்டான படங்களிலும் நடித்து அசத்தி வரும் ஆண்ட்ரியா இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.
ஆண்ட்ரியாவின் இசைக்கச்சேரி: வரும் செப்டம்பர் 22ம் தேதி ஓசூரில் உள்ள அதியமான் கல்லூரியில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசைக்கச்சேரி அரங்கேற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனையாகி வருகின்றன. ஆண்ட்ரியாவின் இசை மழையில் நனைய ரசிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முன்னதாக மீடியா சர்க்கிள் சார்பில் நடத்தப்பட்ட பிரதீப் குமார் இசைக்கச்சேரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜோஷ் ஆப் உடன் இணைந்து: "இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன். இந்நிலையில், ஜோஷ் ஆப் உடன் இணைந்து இந்த இசைக்கச்சேரியை நடிகை ஆண்ட்ரியா நடத்தப் போவது குறிப்பிடத்தக்கது.
இசை பிரியர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் வழங்க இப்படியொரு பிரம்மாண்ட ஏற்பாட்டை ஜோஷ் ஆப் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவலுக்கு ஜோஷ் செயலியுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications











