ஆன்ட்ரியாவுக்கு, கமல் ஹாசன்.. 'இச் இச்'...?

By Sudha

விஸ்வரூபம் 2ம் பாகத்தில் கமல்ஹாசனும், ஆண்ட்ரியாவும் முத்தமிட்டுக் கொண்டார்கள்... இதுதான் இப்போதைக்கு விஸ்வரூபம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் என்கிறார்கள்.

படத்துக்காக இந்த முத்தக் காட்சி இடம் பெற்றிருப்பதாகவும், அதை வழக்கம் போல ரகசியமாக வைத்திருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏற்கனவே ஜீவாவின் என்றென்றும் புன்னகை படத்தில் கிளாமராக வந்து போனவர் ஆண்ட்ரியா. நல்ல கிளாமர் என்று பலராலும் போற்றப்பட்ட நிலையில் இப்போது முத்தக் காட்சியில், அதுவும் கமல்ஹாசனுடன் முத்தக் காட்சியில் நடித்திருப்பதாக அடிபட ஆரம்பித்துள்ளார்.

மாஸ் கிஸ்...

மாஸ் கிஸ்...

விஸ்வரூபம் முதல் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு காட்சிகள் பெரிய அளவில் இல்லை. ஆனால் 2ம் பாகத்தில் அவருக்கு நிறைய காட்சிகள் வருகிறதாம். அதிலும் கமலுடன் ஒரு லிப் லாக்கும் இருக்கிறதாம்... பார்க்க மாஸாக இருக்கும் என்று கோலிவுட் பட்சிகள் காதில் கிசுகிசுக்கின்றன.

நல்லாருக்காமே

நல்லாருக்காமே

இந்த முத்தக் காட்சியை வழக்கம் போல 'கலைநயத்துடன்', 'கமல் லயத்துடன்' படம் பிடித்துள்ளார்களாம். காட்சியும் நன்றாக வந்திருக்கிறதாம்.. முத்தமும்தான்.

ஆமாம்.. ம்ஹூம்...

ஆமாம்.. ம்ஹூம்...

அப்படியா, நிஜமா என்று ஆண்ட்ரியாவிடம் சிலர் கேட்டபோது அவர் மறுக்கவும் இல்லையாம், ஆம் என்று ஆமோதிக்கவும் இல்லையாம்.

அஸ்மிதா சுப்பிரமணியம்

அஸ்மிதா சுப்பிரமணியம்

இந்தப் படத்தில் அஸ்மிதா சுப்பிரமணியம் என்ற ரோலில் வருகிறாராம் ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் தொடர்ச்சிதான் இந்தப் படம்.

அப்ப பூஜா குமாருக்கு...??

அப்ப பூஜா குமாருக்கு...??

முதல் பாகத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்தவர் பூஜா குமார். அவருக்கு 2ம் பாகத்தில் எப்படி வேலை கொடுத்துள்ளனர் என்று தெரியவில்லை. அவருக்கும் முத்தக் காட்சி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

அபிராமியும் பராக் பராக்!

அபிராமியும் பராக் பராக்!

அதேசமயம், 2ம் பாகத்தில் விருமாண்டி நாயகி அபிராமியையும் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X