பிசாசு 2 லுக் இதுதானா ஆண்ட்ரியா.. ஓவர் மேக்கப் போட்டோவை பார்த்து பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியாவின் ஓவர் மேக்கப் லுக்கை பார்த்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் எப்படி நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா என பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

அடுத்ததாக இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நாயகியாகவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

பிசாசு 2

பிசாசு 2

விஷால் - மிஷ்கின் பிரச்சனையில், சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார் மிஷ்கின் என பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசாசு 2 படத்தைத் தான் இயக்கப் போவதாக மிஷ்கின் அதிரடி அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். மேலும், நடிகை ஆண்ட்ரியா தான் லீடு ரோல் என்றும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேய் மாதிரி இருக்கீங்க

பேய் மாதிரி இருக்கீங்க

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற சேலை அணிந்து இருக்கும் புகைப்படங்களை வரிசையாக பதிவிட்டு இருந்தார். லைக் வரும் என்று பார்த்த அவருக்கு, அவர் போட்டிருந்த ஓவர் மேக்கப்பை பார்த்த ரசிகர்கள் அய்யோ பேய் என அரண்டு ஓடுகின்றனர்.

அந்த படத்தில் கூட

அந்த படத்தில் கூட

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை பேய் படத்தில் கூட ரசிகர்களை இப்படி பயமுறுத்த வில்லையே ஆனால், இந்த போட்டோவை பார்த்தால் பயம் வருது என ஏகப்பட்ட குறும்புக்கார நெட்டிசன்கள் அவரை கலாய்த்துத் தள்ளி வருகின்றனர். சமீப காலமாக இன்ஸ்டாவில் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலான நிலையில், இந்த போட்டோவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

கிழவி லுக்

கிழவி லுக்

மேலும், சில கோலிவுட் ரசிகர்கள் நீங்க எப்பவோ ஆன்ட்டி ஆகிட்டீங்க, இப்ப கிழவி மாதிரி ஆகிட்டீங்க என்றும், இவ்ளோ மேக்கப் உங்களுக்கு செட் ஆகலை, மேக்கப் இல்லாமலே நீங்க அழகாத் தான் இருப்பீங்க என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு சமூக வலைதளத்தை கலகலப்பாக்கி வருகின்றனர்.

இதுதான் கெட்டப்பா

இதுதான் கெட்டப்பா

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்க உள்ள பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கெட்டப்பை ரிவீல் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா என வேற லெவலில் வச்சு செய்து வருகின்றனர் சில நெட்டிசன்கள். அதிலும் நடு வகிடு எடுத்து வாரிய ஹேர் ஸ்டைலும் கேவலமாக இருக்கிறது. முதலில் இந்த போட்டோக்களை டெலிட் செய்யுங்க என்கின்றனர்.

மாஸ்டரில் என்ன ரோல்

மாஸ்டரில் என்ன ரோல்

தளபதி விஜய் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வழக்கம் போல மாஸ்டர் படத்தில் உங்களுக்கு என்ன ரோல், படம் எப்போ வரும் நீங்களாவது ஏதாவது அப்டேட் கொடுங்களேன் என சில பல கோரிக்கைகளையும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வைத்து வருகின்றனர். விஜய்சேதுபதிக்கு ஜோடியா அல்லது வேறு கதாபாத்திரமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X