ஆண்ட்ரியாவை பிரச்சாரத்துக்கு அழைத்தாரா விஜய்?.. மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்தது இதுதான்.. அடடே அருமை!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தனது ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் பணிகளிலும் தனது கட்சியின் பிரச்சாரப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஜன நாயகன் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகை ஆண்ட்ரியா தற்போது இணை தயாரிப்பாளராகவும் இருந்து நடித்து வெளியாகியுள்ள படம் மாஸ்க். இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் புரோமோசன்களில் ஆண்ட்ரியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு பேட்டியில் நடிகர் விஜய் உடன் மாஸ்டர் படத்தில் பணியாற்றியது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு சுமார் கடந்த 7,8 ஆண்டுகளாகவே இருந்து வந்தது. குறிப்பாக தலைவா படம் வெளியான பின்னர் தொடங்கிய இது தொடர்பான கிசுகிசுக்கள் அதன் பின்னர் அடங்கியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த பேச்சு தீவிரமாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் இவரது நடிப்பில் தி கோட் என்ற படம் வெளியானது. அடுத்து ஜன நாயகன் எனும் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டார். படத்தின் ரிலீஸ்க்கான வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Actress Andrea Jeremiah Opens Vijay Asked To Her About Political Interest Of Master Movie Shooting Spot

சினிமாவில் தொடர வேண்டும்: இப்படி இருக்கும்போது, நடிகை ஆண்ட்ரியா அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவது எனக்கு வருத்ததை அளிக்கிறது. என்னைக் கேட்டால், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். நான் அவருடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன். நான் அவருடன் நடிக்கும்போது அவர் மிகப்பெரிய ஸ்டார். ஏதோ அவர் வளர்ந்து வரும் கால கட்டத்தில் நான் அவருடன் நடிக்கவில்லை.

அரசியல் ஆர்வம்: தான் ஒரு பெரிய ஸ்டார் என்பதுபோல ஒருநாளும் அவர் படப்பிடிப்புத் தளத்தில் நடந்து கொண்டது இல்லை. மிகவும் எளிமையாக , சிம்பிளாக அனைவரும் எளிதில் அப்ரோச் செய்யும் அளவுக்கு இருப்பார். ஒரு நல்ல மனிதர். அவருடன் இணைந்து கூகுள் கூகுள் பாடல் பாடியுள்ளேன். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் என்னிடம் அரசியலில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டார். நான் இல்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அரசியலில் களமிறங்க போகிறார் என்று அப்போது நினைக்கவில்லை" என்று கூறுகிறார். அடுத்ததாக பிரச்சாரத்திற்கு அழைத்தால் போவீர்களா என்று கேட்டதற்கு, "ஐய்யய்யோ.. நான் போக மாட்டேன், அதை நான் மாஸ்டர் படப்பிடிப்பிலேயே சொல்லிவிட்டேன்" என்று கூறுகிறார். இவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X