நான் அந்த விஷயத்திலும் கில்லாடி... ஆண்ட்ரியா வெளியிட்டதை பார்த்து வாயை பிளந்த இணையவாசிகள்!
சென்னை : கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ஆண்ட்ரியா இப்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளையும் டிப்ஸ்களையும் வழங்கி வருகிறார்.
நடிகை, பாடகி என பல முகங்களைக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகம் என்பது பலரும் அறிந்ததே.
அது மட்டும் இல்லீங்க அந்த விஷயத்திலும் கில்லாடி என செய்து காட்டி பகிர்ந்ததை பார்த்த இணையவாசிகள் வாயைப் பிளந்து சபாஷ் போட்டுள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன்
பாடகியாக வலம்வந்த ஆண்ட்ரியா கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். இருப்பினும் ஆயிரத்தில் ஒருவன் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்தது. பஞ்சமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு முழுநேர நடிகையாக உள்ள ஆண்ட்ரியா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில்
தரமணி மற்றும் வடசென்னை போன்ற படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை அள்ளிய ஆண்ட்ரியாவுக்கு கடைசியாக மாஸ்டர் வெளியாகி இருந்தது. இதில் உடற்பயிற்சி ஆசிரியராக வந்து பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். ஆனால் சில காட்சிகள் மட்டுமே இவருக்கு வைக்கப்பட்டது.

பிசாசு 2
மாஸ்டர் படத்திற்கு பிறகு இனி முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு பல்வேறு கண்டிஷன்களை போட்டு வரும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2ல் நடித்து வருகிறார். சில உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு பிசாசு 2 உருவாகி வருகிறது என சொல்லப்படும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

யோகா செய்வதிலும் கில்லாடி
திரையில் பாடகி மற்றும் நடிகை என பன்முகங்கள் கொண்டுள்ள ஆண்ட்ரியாவுக்கு சமைப்பதில் மிகவும் ஆர்வம் என்பது பலரும் அறிந்ததே ஆனால் இப்பொழுது உடம்பை வில்லாக வளைத்து யோகாசனங்களை அசால்டாக செய்வதிலும் கில்லாடி என கெத்தாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்து இணையவாசிகள் வாயடைத்துப்போய் சபாஷ் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











