நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா.. பியானோ வாசித்தப்படியே குவாரண்டைன் காலத்தை கடந்து வருகிறார்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளது. பியானோ வாசிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொரோனா பாதிப்பை அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

பிசாசு 2, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் உருவாகி வருகின்றன.

ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

ஏகப்பட்ட சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்காமல் தாக்கி வரும் கொரோனா வைரஸ் நடிகை ஆண்ட்ரியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதாகவும் தற்போது கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

வாசித்தபடியே

"If at all the world were mine" என்கிற பாடலை பாடிக் கொண்டு பியானோ வாசிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஆண்ட்ரியா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கேப்ஷனில் அறிவித்துள்ளார். இன்னமும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதாகவும், தனது தனிமையை போக்க தனக்கு பிடித்த இசையையும் பாடல்களையும் பாடி வருவதாகவும் கூறியுள்ளார்.

சோஷியல் மீடியாவுக்கு பிரேக்

சோஷியல் மீடியாவுக்கு பிரேக்

கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டதாகவும், நாடே கொரோனாவால் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் என்ன போஸ்ட் போடுவது என்றே தெரியவில்லை என்றும் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

மாஸ்டர் படத்தில்

மாஸ்டர் படத்தில்

இந்த ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கல்லூரி தோழியாக நடித்து இருந்தார் ஆண்ட்ரியா. கடைசியாக கிளைமேக்ஸில் வரும் சண்டை காட்சியில் விஜய் உடன் இணைந்து வில் வித்தையால் லாரிகளை பறக்க விடுவார்.

ஆண்ட்ரியா நடிப்பில்

ஆண்ட்ரியா நடிப்பில்

சுந்தர் சியின் அரண்மனை 3ம் பாகம், மிஷ்கினின் பிசாசு 2ம் பாகம், கா, வட்டம் என ஏகப்பட்ட படங்கள் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. ஆண்ட்ரியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள், விரைவில் குணமடைந்து வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X