இன்று கருப்பு நாள்.. காதலர் தினத்தில் நொந்து கொண்ட ஆண்ட்ரியா!

சென்னை : நடிகை ஆண்ட்ரியா காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

தற்போது, ஆண்ட்ரியா பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா

சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆண்ட்ரியா. இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை அள்ளியது. அழகான முகம், அம்சமான நிறம் என அனைத்தும் பொருந்தி இருந்ததால், அனைவர் மனதிலும் இடம் பிடித்தார் ஆண்ட்ரியா.

அடுத்தடுத்த ஹிட் படங்களில்

அடுத்தடுத்த ஹிட் படங்களில்

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்திலும் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்தார். மேலும், தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார்.

பிசாசு 2

பிசாசு 2

பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை தூண்டியது. அப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

முக்கியமான கதாபாத்திரத்தில்

முக்கியமான கதாபாத்திரத்தில்

தொடர்ந்து நயன்தாரா, சமந்தா போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். சிபி ராஜுடன் வட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதைத் தொடர்ந்து அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

இன்று கருப்பு நாள்

இன்று கருப்பு நாள்

இந்நிலையில், காதலர் தினமான இன்று உலகமே காதலர் தினத்தை கொண்டாடி வரும் நேரத்தில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில், கருப்பு உடை அணிந்து கொண்டு, கருப்பு இதயத்தை கேப்ஷனாக பதிவிட்டு, இன்று கருப்பு நாள் என்று நொந்துக் கொண்டுள்ளார். இவரின் பதிவைப் பார்த்த பலர், ஏன் இது போன்ற பதிவு, காதல் பிடிக்காதா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X