மொட்டை மாடியில் வளர்ந்த, கொத்தமல்லி, பச்சை மிளகாய்.. ஆச்சரிய ஆண்ட்ரியா அசத்தல் அட்வைஸ்!

By

சென்னை: மொட்டை மாடியில் பச்சை மிளகாயை வளர்த்துள்ள நடிகை ஆண்ட்ரியா, எளிதாக காய்கறி வளர்க்கலாம் என்கிறார்.

Recommended Video

Andrea Jeremiah special dedication for Chennai Police | Andrea

பிரபல நடிகை ஆண்ட்ரியா, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

விஜய்யின் மாஸ்டர்

விஜய்யின் மாஸ்டர்

தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், கமலின் விஸ்வரூபம், உத்தமவில்லன், தரமணி, வடசென்னை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், சுந்தர்.சியின் அரண்மனை 3 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

மாஸ்டர் ரிலீஸ் லாக்டவுன் காரணமாகத் தடைபட்டுள்ளது. அரண்மனை 3 ஷூட்டிங்கும் தடை பட்டிருக்கிறது. லாக்டவுன் காரணமாக, சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் வீட்டில் உள்ள தேன் கூட்டையும் புலம் பெயர் தொழிலாளர்களையும் ஒப்பிட்டு போட்டிருந்த பதிவு பரபரப்பானது.

காய்கறி தோட்டம்

காய்கறி தோட்டம்

நாடு முழுவதும் சிக்கித்தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரசு எப்படி பொறுப்பேற்காமல் இருக்க முடியும்? என்று அந்தப் பதிவில் அவர் கேட்டிருந்தார். இந்நிலையில் அவர் தன் வீட்டு மொட்டை மாடியில் சிறிய காய்கறி தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். இதுபற்றி அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கற்றுக்கொண்டேன்

கற்றுக்கொண்டேன்

அதில் அவர், இந்த லாக்டவுனில் மற்றவர்களைப் போலவே நானும் சமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதனால் வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க முயன்றேன். ஒரு மாதத்துக்கு முன், கீரைகள், கொத்தமல்லி, மிளகாய் செடிகளை வாங்கி வைத்தேன். இப்போது பார்க்கிறேன். அந்தக் குழந்தைகள் வளர்ந்துவிட்டன.

வீட்டில் காய்கறி

வீட்டில் காய்கறி

இதற்கு அதிக இடம் தேவையில்லை. அதிக முயற்சி கூட இல்லை. உங்களிடம் தோட்டம் இல்லை என்றாலும் வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்கலாம் என்று கூறியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நல்ல முயற்சி என்று கூறியுள்ளனர்.

இசைக் கருவிகள்

இசைக் கருவிகள்

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும் நடிகர், நடிகைகள், ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்று வருகின்றனர். சில நடிகைகள் பிற மொழியை கற்கின்றனர். சிலர் இசைக்கருவிகளை கற்று வருகின்றனர். சிலர் நடிப்பை மேம்படுத்த பயிற்சி எடுக்கின்றனர். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா சமையல் கற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X