நீங்க ரொம்ப லேட்.. இதெல்லாம் ஓல்டு ட்ரென்ட்.. டல்கோனா காஃபி போட்ட நடிகையை கதறவிட்ட நெட்டிசன்ஸ்!
சென்னை: டல்கோனா காஃபி தயாரித்ததோடு அதற்கு ஓவர் பில்டப் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா கதறவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆன அவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்நி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகையாக மட்டுமின்ற பாடகியாகவும் வலம் வருகிறார் ஆண்ட்ரியா.

தவறான தொடர்பு
கடந்த ஓராண்டாக படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருந்தார் ஆண்ட்ரியா. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அதற்கு காரணம் திருமணம் ஆன நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட தவறான தொடர்புதான் என்றார்.

அடுத்தடுத்து படங்கள்
அந்த நபருடனான தொடர்பினால் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டதாக கூறி பரபரப்பை கிளப்பிய அவர், ரீஎன்ட்ரி கொடுத்த கையோடு அடுத்தடுத்து படங்களில் புக்கானார். விஜயின் மாஸ்டர், சிபியின் வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

த்ரோபேக்
தொடர்ந்து மாளிகை, கா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமூக வலைதளங்களில் துறுதுறுவென இருக்கும் ஆண்ட்ரியா தனது பழைய போட்டோக்களை த்ரோபேக் செய்து வந்தார்.

ட்ரோல்
அதோடு யோகா, உடற்பயிற்சி என செய்து தனது போட்டோக்களை மோட்டிவேஷனல் கேப்ஷன்களுடன ஷேர் செய்து வந்தார். அந்த வகையில் அண்மையில் அவர் ஷேர் செய்த யோகா போட்டோ சமூக வலைதளங்களில் சிக்கி பெரும் ட்ரோலானாது.

டல்கோனா
தொடர்ந்து தான் செய்த கேக்குடன் போஸ் கொடுத்த அவர் காரில் எடுத்த செல்பியையும் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது செம ஹோம்லி லுக்கில் சன்ரைஸ் காஃபி தூளுடன் டல்கோனா காஃபி செய்திருக்கிறார் ஆண்ட்ரியா.

ஆச்சரியக்குறி
அதை சுவைத்து காம்ப்ளிமென்ட் கொடுக்கும் ஆண்ரியா, ரரராரா.. புதிய சன்ரைஸ் என பாட்டும் பாடியிருக்கிறார். ரெசிபியுடன் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஒரு ரோஸ் மில்கே டல்கோனா காஃபி குடிக்கிறதே.. அடடா.. ஆச்சரியக்குறி என புகழ்ந்துள்ளனர்.

நீங்க ரொம்ப லேட்
இன்னும் சில நெட்டிசன்கள் போலியா நடிக்காதீர்கள் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சிலர் தங்களுக்கும் வேண்டும் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் ஆண்ட்ரியா வயிறு கலக்கிறப்போகுது என எச்சரித்துள்ளனர். சில நெட்டிசன்கள் நீங்க ரொம்ப லேட்.. இதெல்லாம் ஓல்டு ட்ரென்ட்.. என பங்கம் செய்துள்ளனர்.

பல நடிகைகள்
லாக்டவுன் 1.0 தொடங்கிய காலத்தில் பல நடிகைகள் தங்களின் லாக்டவுன் நேரத்தை பயன்படுத்தும் வகையில் டல்கோனா காஃபி தயாரித்தனர். தங்களின் ரசிகர்களும் இதுபோல் டல்கோனா காஃபியை ட்ரை செய்து ஷேர் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுத்தனர்.

கதறவிட்ட நெட்டிசன்ஸ்
டல்கோனா காஃபி ட்ரென்ட்டாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. அது அவுட் டேட்டான நிலையில் சுமார் இரண்டு மாதங்கள் கழித்து நடிகை ஆண்ட்ரியா அதனை விளம்பரப் படுத்தியிருக்கிறார். இதனால் தான் அவரை கதறவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











