அந்த சம்பவத்துக்கு அப்புறமா விஜய்யோட தீவிர ரசிகையா மாறிட்டேன்... ஆன்ட்ரியா சுவாரஸ்யம்!

சென்னை : நடிகை ஆன்ட்ரியா சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். விஜய்யுடன் அவர் நடித்த மாஸ்டர் படத்தில் சிறிய கேரக்டர் என்றாலும் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார். தற்போது பிசாசு 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

நடிகை ஆன்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நீண்ட நெடுங்காலங்களாக திரைத்துறையில் இவரது பயணம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. மாடர்ன் கேரக்டராக இருந்தாலும் ஹோம்லி கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்.

பின்னணி பாடகி

பின்னணி பாடகி

பின்னணி பாடகியாக சிறப்பான பல பாடல்களை ஆன்ட்ரியா பாடியுள்ளார். தொடர்ந்து நடிகையாகவும் மாறி வடசென்னை, அரண்மனை படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே உள்ளது. இதன்மூலம் வெற்றிகரமான நாயகியாக கோலிவுட்டில் வலம் வருகிறார்.

பிசாசு 2 படம்

பிசாசு 2 படம்

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளப் படங்களில் இவர் நடித்து வருகிறார். இவரது கேரியரில் வடசென்னை, தரமணி படங்கள் சிறப்பான திருப்புமுனையை ஏற்படுத்தின. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

உடற்பயிற்சி ஆசிரியை

உடற்பயிற்சி ஆசிரியை

இந்தப் படத்தில் உடற்பயிற்சி ஆசிரியையாக விஜய்யின் தோழியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் குறித்து ஆன்ட்ரியா கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரது அமைதியான இயல்பு சிறப்பானது என்று ஆன்ட்ரியா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகை

விஜய்யின் தீவிர ரசிகை

மேலும் தான் மாஸ்டர் படத்திற்கு முன்னதாக விஜய்யின் படங்களை அதிகமாக பார்த்ததில்லை என்றும் அந்தப் படத்தில் நடித்தவுடன் விஜய்யின் தீவிர ரசிகையாக தான் மாறிவிட்டதாகவும் ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்தது அவ்வளவு சிறப்பான அனுபவத்தை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X